Posts

Showing posts from February, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்க வான் பரப்பில் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும்தட்டு பறந்ததா? - உறுதிப்படுத்திய FBI அமைப்பு!

Image
உருளை வடிவ பொருள் ஒன்று தங்களின் விமானத்திற்கு மேல் அதிவேகமாக பறந்ததாகவும் இதை பற்றி கூற வெறுப்பதாகவும் கூறுகிறார். அது ஏதும் ஏவுகணையா என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் கலம் ஒன்றை வானில் நேரில் பார்த்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதிப்படுத்தியுள்ளது. ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது நீண்ட நெடிய சந்தேகத்துக்குரிய ஒரு விவாதமாகவே பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்களில் சிலர் தாங்கள் ஏலியன்களை பார்த்திருப்பதாகவும், பறக்கும் தட்டுகளை பார்த்தாகவும், வேற்றுகிரகவாசிகளின் கலன்களை பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இதற்கான நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியே. சுருக்கமாக UFO என அழைக்கப்படும் unidentified flying objects அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களை பார்துள்ளதாக அவ்வப்போது சிலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சின்சினாட்டி நகரில் இருந்து ஃபீனிக்ஸுக்

புனேயில் காலை நடைபயிற்சி சென்றவர்களுக்கு அதிர்ச்சி: தொண்டை அறுபட்டு, முகம் சிதைந்த நிலையில் உடல் கிடந்த பயங்கரம்

Image
இத்தகைய கொலைகளின் அதிகரிப்பு ஹோமிசைட் தொடர் கொலையாளியின் வேலையாக இருக்குமோ என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். புனேயில் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சனிக்கிழமை காலை அதிர்ச்சிக் காத்திருந்தது, தொண்டை அறுக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் உடல் ஒன்று கிடந்ததே அவர்கள் அதிர்ச்சிக்குக் காரணம். நேஷனல் கெமிக்கல் சோதனைச்சாலையில் பி.எச்டி ஃபெலோஷிப்பில் இருந்த சுதர்ஷன் என்ற 30 வயது நபரின் உடல்தான் அது. புனேயின் சுஸ் என்ற கிராமத்தில் மலைசார்ந்த பகுதியில் அவரது உடல் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது. நடைப்பயிற்சி செய்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அப்போது மாணவரின் தொண்டை அறுக்கப்பட்டிருப்பதையும் முகம் சிதைக்கப்பட்டிருப்பதையும் கண்டனர். அடையாளத்தை மறைக்க முகத்தை கல்லைக் கொண்டு சிதைத்துள்ளனர். ஆனால் சுதர்சனின் பாக்கெட்டில் அடையாள அட்டை இருந்ததையடுத்து எளிதாகப் போனது. உடலும் அரை நிர்வாண நிலையில் இருந்தது. ரசாயனத்தில் முனைவர் பட்டம் பெற ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு நேஷனல்

45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உடையவர்களுக்கும் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி.. இணைநோய் பட்டியல் இங்கே..

Image
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோயுடன் இருந்தால், அவர்களும் cowin செயலியில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 01.03.2021 - இன்றுமுதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிபோடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள

தொன்மையான தமிழ் மொழியை கற்க முடியாமல் போனது வேதனை - பிரதமர் மோடி வருத்தம்

Image
நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். உலகின் தொன்மையான தமிழ் மொழியை என்னால் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். மே-ஜூன் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தொடங்கிவிடும். பருவமழை தொடங்குவதற்கு முன் நாட்டில் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். மேலும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமராகவும், முதல்வராகவும் நீண்டகாலமாக இருந்த காலத்தில் உங்களால் தவறவிட்ட விஷயங்கள் என்ன என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை என்னால்

18 மணி நேரத்தில் 25.54 கிமீட்டருக்கு சாலை அமைத்து நெடுஞ்சாலைத்துறை சாதனை!

Image
தற்போது, ​​சோலாப்பூர்-விஜயாப்பூர் நெடுஞ்சாலையின் 110 கி.மீ., பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 2021 க்குள் இந்த திட்டம் நிறைவடையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) விஜய்பூர்-சோலாப்பூர் (என்.எச் 52) இடையே 25.54 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலையின் ஒரு வழிப்பாதையை, சாதனை அளவாக 18 மணி நேரத்தில் நிறைவு செய்துள்ளது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக படங்களுடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இத்தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெரும் எனவும் அவர் கூறியுள்ளார். Bengaluru-Chitradurga-Vijayapura-Solapur-Aurangabad-Dhule-Indore-Gwalior இணைப்பு வழித்தடத்தின் ஒரு அங்கமாக இந்த சாலை போடப்பட்டிருப்பதாகவும். தேசிய நெடுஞ்சாலை எண் 52-ல் Vijaypur-Solapur பகுதிகளுக்கு இடையே 4 வழிப்பாதையின் ஒரு அங்கமாக ஒரு வழிப்பாதையில் 25.54 கிமீ தொலைவுக்கு 18 மணி நேரத்தில் சாலை போடப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்தி

iPhone-ஐ ஏன் பயன்படுத்துவதில்லை? பில்கேட்ஸ் கூறும் சுவாரஸ்ய தகவல்

Image
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரான பில்கேட்ஸ், தான் ஏன் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை என்ற தகவலை கிளப் ஹவுஸ் செயலியின் நேர்காணலில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் பல ஆண்டுகளாக உலக பணக்காரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். பின்னர், சமூக சேவை, அன்பளிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக அதிக நிதிகளை ஒதுக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக திகழும் அவர், அண்மையில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தன்னைப் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, உலகின் மிகப்பெரும் தலைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஐபோன்களை, தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் சுமார் 1 பில்லியன் பேர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், டெக் ஜாம்பவானான பில்கேட்ஸ், ஆன்டிராய்டு போன்களை மட்டுமே தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். கிளப்ஹவுஸ் (Clubhouse) எனும் செயலியின் நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், செல்போன்கள் குறித்து கேள்வ

இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் கண்டுபிடிப்பு

Image
இத்தாலியில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ ரோம்,  இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது. அது அங்கு வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டிடங்களை பாதுகாத்து வருகிறது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ 4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த தேர் சிதையாமல், மிகச

கொரோனாவை தொடர்ந்து நாட்டில் புதிதாக முளைத்துள்ள பர்வோ வைரஸ்!

Image
உத்தர பிரதேசத்தில் நாய்களை தாக்கும் பர்வோ என்ற வைரஸ் கான்பூரில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லக்னோ , சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.  இதற்கு மத்தியில் பறவை காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவத்தொடங்கி  காகங்கள் இறந்துகிடந்தது. இந்த நிலையில் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது பர்வோ என்ற வைரஸ்  நாய்களுக்கு பரவத்தொடங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை எட்டு நாய்கள் பர்வோ வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த எட்டு நாய்களின் பிரேதங்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் குடல் சிதைந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பர

வருகிற 15, 16-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Image
வருகிற 15, 16-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். திருச்சி,  திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் பேசியதாவது:- மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நமது கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனாலும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை கண்டித்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார். Also read :  சுத்துதே சுத்துதே நெட்வொர்க்...“இணையத்தின் வேகம் படுமோசம்; கடைசி 10 இடத்தில் இந்தியா”

வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை

Image
வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டியின்போது கூறினார். கோழிக்கோடு, வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா பேட்டியின்போது கூறினார். கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா, திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. பாதிக்கப்படுபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை தவிர்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கும் வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படும். மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில் கேரளாவிலும் விமான நிலையங்களில் கொரோனா பாசோதனை செய்யப்பட்டு வந்தது. வெளிநாடுகளில்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடக்கம்

Image
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. சென்னை,  தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வ

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி

Image
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். புதுடெல்லி,  இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.  இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.  இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பத

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்

Image
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும்.                 பீட்ரூட் மிளகு சாப்ஸ் தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 4 மிளகு - 1 டீஸ்பூன் இஞ்சி - 2 துண்டு பூண்டு - 6 பல் லவங்க பட்டை - 2 தனியா தூள் - 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் - கால் கப் உப்பு, எண்ணெய் - தேவைக்கு செய்முறை: பீட்ரூட், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, பூண்டு, இஞ்சி, லவங்க பட்டை, தனியா தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு கலந்து பீட்ரூட்டை வேகவைத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் அதில் அரைத்த மசாலா கலவையை கொட்டி, மசாலா வாசம் நீங்கி கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம். சூப்பரான பீட்ரூட் மிளகு சாப்ஸ் ரெடி. Also read :  மணமணக்கும் மோர் குழம்பு… டுடே ஸ்பெஷல்!

இதுக்கு நம்ம ஊர் ஆதார் கார்டு எவ்ளவோ மேல்... மாஸ்க் கட்டாயம்தான் இதுக்குகூடவா!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

Image
பெண்ணின் புதிய ஓட்டுநர் உரிமத்தால் இணையத்தில் பெரும் அதிர்வைலையை உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் தனியாக காரில் பயணிக்கும்போது கூட மாஸ்க் அணிந்தவாறே பயணிக்க வேண்டும் என இந்தியா போன்ற உலக நாடுகள் பல அறிவித்திருக்கின்றன. ஆகையால், பொதுவெளியில் பயணிக்கும்போது மாஸ்க் கட்டாயமாகியுள்ளது. இது கொடிய கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், உலக நாடுகள் பலவற்றில் மக்கள் மாஸ்க்குடனே வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில், பெண் ஒருவர், முக கவசம் அணிந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். பலர் இதனை ஃபோட்டஷாப் என கருத்து தெரிவித்து வந்தநிலையில், அதிகாரி ஒருவரின் கவனக்குறைவால் அரங்கேறிய தவறு என்பது இது தெரிய வந்திருக்கின்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பில்கிரிம் லெஸ்லி ரே எனும் இளம்

ஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா?

Image
ஹைதராபாத் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 100 ஆக்டேன் பிரீமியம் பெட்ரோலுக்கு, வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். உங்கள் பாக்கெட் நிறைய பணம் இருக்கிறதா? பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா? அப்படியானால் ஹைதரபாத் நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில பெட்ரோல் பங்க்குகளுக்கு செல்லுங்கள். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இங்கு பிரீமியம் கிரேடு பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரீமியம் கிரேடு பெட்ரோல் இன்ஜின் செயல்திறனை மேம்படுத்தும். அத்துடன் மனதிற்கு இனிய ஓட்டுதல் அனுபவத்தையும் இது வழங்கும். ஹைதராபாத் நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது 100 ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் (100 Octane Premium Petrol) ஆகும். இந்த பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 160 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்த பிரீமியம் கிரேடு பெட்ரோல், டெல்லி, குர்கான், நொய்டா, ஆக்ரா, ஜெய்ப்பூர்

அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!

Image
ஹீரோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஸ்பிளெண்டர் பைக்குகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு பற்றிய பேச்சே அதிகளவில் மக்கள் மத்தியில் தென்பட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தொட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து, டீசலின் விலையும் ரூ. 100ஐ தொடுமளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால், மக்கள் மின் வாகனங்கள் மற்றும் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களின் பக்கம் மாறிய வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையைத் தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின், ஸ்பிளெண்டர் பிராண்ட் பெயரில் விற்பனையாகும் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிராண்ட்டில்; ஸ்பிளெண்டர் ப்ளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் ஆகிய மாடல்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாடல்களுக்கே சிறப்பு ஆஃபர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தினசர

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அக்கவுண்டுகளை நிரந்தரமா டெலிட் செய்ய வேண்டுமா? இதை பண்ணுங்க போதும்.

Image
How to delete whatsapp, facebook, instagram accounts  உங்கள் தரவை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம், எவ்வளவு நேரம் எடுக்கும், எந்த தரவு கிடைக்கும் என்பதைப் பற்றி எல்லாவற்றையும் விரிவாக இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிரந்தரமாக நீக்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? ஆனால், சமூக ஊடக கணக்குகளை நீக்குவதற்கு முன்பு உங்கள் எல்லா தரவையும் முதலில் பதிவிறக்கம் செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். உங்கள் தரவை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம், எவ்வளவு நேரம் எடுக்கும், எந்த தரவு கிடைக்கும் என்பதைப் பற்றி எல்லாவற்றையும் விரிவாக இங்கு விளக்கியுள்ளோம். உங்கள் கணக்கை நீக்கியதும், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், அரட்டைகள் மற்றும் பிற கணக்குத் தரவுகள் அனைத்தும் தளங்களிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதை நினைவில் கொள்க. மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும். வாட்ஸ்அப் தரவை எவ்வாறு பதிவிறக்குவது? உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு முன், உங்கள் எல்லா சாட்களையும் பேக் அப் எடுக்க விரும்பினால் உங்கள் எல்லா தரவையும் பதிவிறக்கம் செய்யலாம்.

சுத்துதே சுத்துதே நெட்வொர்க்...“இணையத்தின் வேகம் படுமோசம்; கடைசி 10 இடத்தில் இந்தியா”

Image
              சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி” - என மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 2010இல் வெளியான பையா படத்தின் டூயட் பாடலுக்காக எழுதிய வரிகள் இப்போது இந்திய மொபைல் இணையதள வேகத்துடன் ஒத்துப் போகிறது. அண்மையில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் இணையதள வேகத்தை கணக்கிட்டு சொல்லும் ஸ்பீட் டெஸ்டின் (Ookla) Global Index-இல் இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது. மாதந்தோறும் இந்த இண்டக்ஸை ஸ்பீட் டெஸ்ட் வெளியிடும். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாத்திற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.  டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது இந்தியா. அண்மையில் தான் இந்தியாவில் 5ஜி இணைய சேவை பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இணையத்தின் டவுன்லோட் வேகம் நொடிக்கு 12.41 மெகா பிட்ஸாகவும், அப்லோட் வேகம் நொடிக்கு 4.76 மெகா பிட்ஸாகவும் உள்ளது. சுமார் 140 நாடுகளின் இணைய வேகத்தின் சேவையை Ookla கணக்கிட்டுள்ளது. இந்தியா அதில் கடைசி பத்து இடங்களை பிடித்துள்ளது.  இந்த பட்டியலில் அமீரகம், தென் கொரியா மற்றும் கத்தார் ஆகிய

'ஏதோ சதி நடக்கிறது; டெக்சாஸில் பெய்வது செயற்கை பனி'': பகீர் கிளப்பும் இணையவாசிகள்!

Image
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பனி செயற்கையானது என அமெரிக்க மக்கள் பகீர் கிளப்பியுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனி பெய்தது. கடுமையான பனி காரணமாக மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது வரலாறு காணாத பனி என்றும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியிட்டன. இந்த பனிப்பொழிவால் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டி கட்டியாக கொட்டும் பனியால் செய்வதறியாது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு குறைந்து வருவதால் பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிய பிரச்னை ஒன்று இணையத்தில் தலைதூக்கியுள்ளது. சதிக் கோட்பாடு என்ற தலைப்பில் இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு பனிப்பொழிவை மையமாக கொண்டுள்ளது. சதிக் கோட்பாடு (Conspiracy Theory) என்பது சாதாரண நிகழ்வுகளை ஒரு சக்திவாய்ந்த ரகசிய கும்பல் திட்டமிட்டு நிகழ்த்துவதாக நம்பப்படுவது ஆகும். அப்படி ஒரு குற்றச்சாட்டு இணையத்தி

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!