நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இறக்கும் தருவாயில் உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சீனர் - 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த சோகம்!

பிப்ரவரி 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், யாவ் சே மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு ஒரு மில்லியன் யுவானை இழப்பீடாக வழங்க ஹூவாய் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீனர் ஒருவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடித்துள்ளார்.

சீனாவின் ஜியாங்சி (Jiangxi ) மாகாணத்தில் யாவ் சே (Yao Ce) என்பவர் வசித்து வருகிறார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். மகனின் நிலையறிந்த யாவ் சேவின் தாய், தன்னுடைய கல்லீரலை மகனுக்கு தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். அப்போது, ரத்த மாதிரிகளையும் பரிசோதனை செய்தபோது யாவ் சேவின் ரத்த மாதிரி, தற்போதைய தாய் மற்றும் தந்தை இருவரின் ரத்தமாதிரிகளுடன் ஒப்பிடுகையில் பொருந்தவில்லை. அப்போது, தன்னை 28 ஆண்டுகளாக வளர்த்த பெற்றோர் உண்மையான தாய், தந்தை இல்லை என கண்டுபிடித்த அவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு யோவ் சே பிறந்த ஹூவாய் மருத்துவமனையில் (Huaihe Hospital) ஏற்பட்ட தவறு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, யோவ் சேவின் தற்போதைய பெற்றோர்களுக்கு பிறந்த குவோ வீயை (Guo Wei ), யாவ் சேவின் உண்மையான பெற்றோர்களுக்கு மாற்றி கொடுத்துள்ளனர். யாவ் சேவின் உண்மையான தாயும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை எடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு இழப்பீடு கேட்டு யாவ் சே, கைஃபெங் நீதிமன்றத்தில் (Kaifeng Intermediate People's Court) வழக்கு தொடர்ந்தார். 

பிப்ரவரி 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், யாவ் சே மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு ஒரு மில்லியன் யுவானை இழப்பீடாக வழங்க ஹூவாய் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. அதன்படி, 8 லட்சம் யுவான் யாவ் சேவுக்கும், அவருடைய பெற்றோர்களுக்கு 2 லட்சம் யுவானும் இழப்பீடாக கிடைக்க உள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைஃபெங்கு மக்கள் நீதிமன்றம் யாவ் சே மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கு ஏழு லட்சத்து 60 ஆயிரம் யுவான்களை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. அதனை வாங்க மறுத்த யாவ் சேவ் மற்றும் அவரது பெற்றோர் 1.8 மில்லியன் யுவான்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என மேல்முறையீடு செய்தனர்.

அதனுடைய இறுதித் தீர்ப்பில் ஒரு மில்லியன் யுவான்களை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், யாவ் சேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாகியுள்ளது. புற்றுநோய் செல்கள் கல்லீரலைக் கடந்த உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிட்டனர். முதன்முதலாக வெளியான தீர்ப்பு குறித்து பேசிய யாவ் சே, தனக்கு கிடைக்கும் இழப்பீடால் எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால், யோவ் சேவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்து இழப்பீடை அதிகமாக பெற்றுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!