நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டம்

விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் குறுங்கலத்தில், அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் பணவசூல், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கப்படும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு செல்லும் இந்த 4 பேருக்கும் பால்கன் ராக்கெட் மற்றும் டிராகன் குறுங்கலத்தில் தேவையான பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்