நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உதிரியான சாதம்: குக்கர் இல்லாமல் சமைப்பதில் என்ன நன்மைன்னு பாருங்க!

அதிக நன்மைகள் தரும் சுவையான வடிசாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பரம்பரியமிக்க இந்தியாவில் தற்போது மாறி வரும் உணவு பழக்கங்களால் பலரும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இந்த மாடர்ன் உணவுகளுக்கு அடிமையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இடையில் ஒரு சில நபர்கள் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இவர்கள் மாடர்ன் உணவுகள் உட்கொண்டாலும் தினமும் ஒருவேளையாவது பாரம்பரிய உணவை உண்பார்கள். அந்த வகையில் பாரம்பரிய உணவுகளில் பழைய சாதத்திற்கு எப்போதும் தனிமவுசு உண்டு. முந்தையா நாள் வடித்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலையில் அதை சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனிதான்.

இந்த உணவிற்கு நீராகாரம் என்று பெயர். தற்போது உள்ள இளைஞர்களுக்கு இந்த உணவின் மகத்துவம் தெரிய அதிக வாய்ப்பில்லை. மேலும் இந்த நீராகாரம் கிடைக்க வேண்டும் என்றால், சாத்ததை வடிக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்சிலையில், பெரும்பாலான மக்கள் சாதத்தை வடிப்பதற்கு பதிலாக குக்கரில் வைத்து செய்துவிடுகிறார்கள். அப்படி செய்தால் நமக்கு சாதம் மட்டும்தான் கிடைக்குமே தவிர சத்துக்கள் கிடைக்க சாத்தியமில்லை. மேலும் குக்கரில் செய்யும் சாதம் பலருக்கும் தீமையை தான் தருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது பலரும் தங்களது உணவு பழக்க வழக்கங்களை மாற்றி வரும் நிலையில், சுவையான வடி சாதம் எப்படி சமைப்பது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

வடி சாதம் சமையலுக்கு தண்ணீர் அளவு எப்படி இருக்க வேண்டும் என முதலில் பார்க்கலாம். ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும். அடுத்து அடுப்பில் தீ அளவு முக்கியம். கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீ இருக்கலாம். அதன்பிறகு மிதமான தீ வைக்க வேண்டும். குக்கராக இருக்கும் பட்சத்தில் மிதமான தீயே போதுமானது. தீ மிக அதிகமாக இருந்தால், சாதம் பக்குவமாக இருக்காது.

சில நேரங்களில் அரிசி பாதி வெந்தும் வேகாத நிலையில் இருக்கும். அதாவது, சில அரிசி நன்கு வெந்திருக்கும். சில வெந்திருக்காது. இதற்குக் காரணம் பாத்திரத்தை அடுப்பில் சரியாக வைக்கவில்லை என்பதே ஆகும். எனவே அடுப்பில் பாத்திரத்தை வைக்கும்போதே சரியாக சுற்றிலும் பொருந்தியுள்ளதா என கவனியுங்கள்.

சிலர் எப்படி பார்த்து சமைத்தாலும், சாதம் குழைந்து விடும். அதற்கு காரணம், அதிக தீயில் சாததை கொதிக்கவிடுவதே! அதோடு அடிக்கடி சாதத்தை கிளறிக் கொண்டிருக்கவும் தேவையில்லை. மிதமான தீயில் கிளறாமல் விட்டாலே சாதம் நன்கு வேகும்.

ஒருவேளை சாதம் குழைந்து விட்டால் உடனே ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கிளறுங்கள். சாதம் உதிரியாக இருக்கும். சாதம் வடித்த பின்னரும் தண்ணீர் இருந்தால், அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள். கரண்டியைக் கொண்டு கிளற வேண்டாம். இதனை செய்தாலே போதும் சூப்பராக வடி சாதம் தயாராகிவிடும்!!!

இந்த சாதத்தை உண்ணும்போது மாடர்ன் உணவுகளால் ஏற்படும் தீங்குகளில் இருந்து நம்மை பாதுகாக்க பெரிதும் உதவும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்