குறிப்பிட்ட பயிற்சிப் பள்ளிகளில் மூலம் வாகன ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் டிரைவிங் டெஸ்ட் இல்லாமலேயே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வரைவு அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முறையான பயிற்சி அவசியம் என்பதுடன், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் ஓட்டுனர் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். ஓட்டுனர் பயிற்சி வழங்குவதற்காக ஏராளமான பயிற்சி பள்ளிகளும் உள்ளன. ஆனால், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்களும், ஊழல்களும் இருந்து வருகின்றன. இதனை களைவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், சிறந்த ஓட்டுனர்களை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒரு புதுமையான திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதாவது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்பாக வாகனத்தை முறையாக இயக்கத் தெரிந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தகுதியானவராக கண்டறியப்பட்டு, அதன் பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
இந்த நடைமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, வாகன ஓட்டுனர் பயிற்சியை செம்மையாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, வாகன ஓட்டுனர் பயிற்சி மையங்களின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த பயிற்சி பள்ளிகள் சிறந்த வாகன ஓட்டுனர்களை உருவாக்கும் வகையில் அதிக தரத்திலான நடைமுறைகளை மேற்கொள்ளும்.
அரசு அங்கீகரிக்கும் குறிப்பிட்ட சிறப்பு அந்தஸ்து கொண்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயின்று, ஓட்டுனர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு ஒரு அதிரடி சலுகை திட்டத்தை கொண்டு வரவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பிட்ட டிரைவிங் பயிற்சி பள்ளிகளில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் ஓட்டுனர்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் நடத்தப்படும் டிரைவிங் டெஸ்ட்டிலிருந்து விலக்கு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்பாக வாகனத்தை இயக்கிக் காண்பிக்கும் சோதனையிலிருந்து விலக்கு பெறுவார். குறிப்பிட்ட பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்கள் நேரடியாக டிரைவிங் லைசென்ஸிற்கு விண்ணப்பித்து, பெற முடியும்.
குறிப்பிட்ட பயிற்சி பள்ளிகளின் மூலமாக பயிற்றுவிக்கப்படும் ஓட்டுனர்கள் சிறப்பான பயிற்சியை பெறுவதால், சாலை விதி மீறல்கள் மற்றும் விபத்துக்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கருதுகிறது.
Comments
Post a Comment