இந்த விசேஷத்தை இதைவிட அழகாக கூற முடியுமா? மகிழ்ச்சியில் திளைத்த தம்பதி வீடியோ
- Get link
- X
- Other Apps
ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை தனது கணவரிடம் மிகவும் வித்தியாசமாக ரசனையுடன் அழகாக தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் டிக்டாக்கில் பிரபலமான ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை தனது கணவரிடம் மிகவும் வித்தியாசமாக ரசனையுடன் அழகாக தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பெண்கள் சந்தோஷமான விஷயங்களை தங்கள் கணவரிடம் சர்பிரைஸாக ரசனையுடன் சொல்ல விரும்புவார்கள். ஆனால், அமெரிக்காவில் டிக்டாக்கில் பிரபலமான ஒரு பெண் தான் கருவுற்றதை மிகவும் வித்தியாசமான முறையில் ரசனையுடன் சுரண்டல் லாட்டரி சீட் மூலம் அழகாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அரிஸோனாவைச் சேர்ந்தவர் ஹெய்லி பெய்ஜ் (Hayli Baez). இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். ஹெய்லி பெய்ஜ் தான் கருவுற்றிருப்பதை தனது கணவரிடம் தெரிவிக்க ஒரு ரசனை மிக்க ஒரு வித்தியாச வழியைத் தேர்வு செய்தார். அவர் தனது கணவரிடம் எப்படி தான் கருவுற்றிருப்பதை தெரிவிக்கிறார் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹெய்லில் பெய்ஜ் தான் கருவுற்றிருப்பதை பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டதும் தனது கணவரிடம் தெரிவிக்க ஒரு வித்தியாசமான முறையை தேர்வு செய்கிறார். அது என்ன வித்தியாசமான முறை என்றால் சுரண்டல் லாட்டரி சீட்டுகளை தனது கணவரிடம் கொடுத்து அதை சுரண்டல் சொல்கிறார். அவரும் அவருடைய கணவரும் சுரண்டல் லாட்டரியை சுரண்டுகிறார்கள். அப்போது ஹெய்லியின் கணவர் தேய்க்கும் லாட்டரி சீட்டில் BABY என்று எழுதப்பட்டுள்ளது. முதலில் புரியாமல் குழப்பமடையும் ஹெய்லின் கணவர் பிறகு, தனது மனைவி கருவுற்றிருக்கிறார் என்று புரிந்துகொண்டு சந்தோஷத்தில் கூக்குரலிட்டபடி ஹெய்லியை கட்டி அனைத்து தூக்குகிறார். ஹெய்லியும் சந்தோஷத்தில் சிரிக்கிறார்.
ஹெய்லிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த விசேஷத்தை இதைவிட அழகாக கூற முடியுமா? என்று கேட்டு தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹெய்லி தான் கருவுற்றிருப்பதை கணவரிடம் சுரண்டல் லாட்டரி சீட் மூலம் தெரிவிக்கிற வீடியோவை யூடியூப்பில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் டிக்டாக்கில் 3 பில்லினுகு மேற்பட்டவர்களும் பார்த்துள்ளதால் வைரலாகி வருகிறது.
Also read : சவுதி அரேபிய பெண்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் ராணுவத்தில் சேர அனுமதி.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment