நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மக்களே உஷார். உங்க போனில் இதை மட்டும் வச்சுக்காதிங்க இருந்தா ரொம்ப ஆபத்து.

உங்கள் போனில் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் சேகரிக்கபடலாம்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக உரையாடலுக்கு செல்போன் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு ப்ளே ஸ்டோரில் இருந்து பலவிதமான ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள்.
அதிலும் சிலர் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம்.
அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் செயலியை பதிவிறக்கம் செய்கிறோம். இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் உங்கள் போனில் செயல் திறனை பாதிக்கலாம். உங்கள் போனில் ஸ்டோரேஜ்-ல் உள்ள தரவுகளை சேகரிக்கலாம். அதனால் இனிமேல் ஆப்கள் டவுன்லோட் செய்யும் போது மிகக் கவனமாக இருங்கள்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்