நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் Hollywood அடையாளத்தை மாற்ற முயற்சி, 6 பேரை கைது செய்த போலீஸ்.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Hollywood அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய அடையாளச் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் மலையின் மீது ஏறி Hollywood என்ற இடம் அருகே w எழுத்தை மறைத்து B வடிவில் நின்று "Hollyboob" என்று வரும் வகையில் நின்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்