நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

10 லட்சம் டாலர் ரொக்கம், துப்பாக்கி, கார்... தடுப்பூசிக்கு அதிரடி பரிசுகள் அறிவித்த கிழக்கு வெர்ஜினியா!

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது அமெரிக்காவின் கிழக்கு வெர்ஜினியா.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்தாலும் அனைத்து நாடுகளும் அதிகம் நம்புவது தடுப்பூசியைத் தான். கொரோனாவின் அடுத்த அலை அடிப்பதற்குள் நாட்டு மக்களை கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புக்குள் கொண்டு வர வேண்டுமென அரசுகள் நினைக்கின்றன.
இதனால் மக்களிடையே தடுப்பூசியை கொண்டு செல்ல தீவிரமாக வேலை செய்கின்றன. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது அமெரிக்காவின் கிழக்கு வெர்ஜினியா. பரிசுகள் என்றால் அரைகுறையான பரிசுகள் அல்ல, துப்பாக்கிகள், ட்ரக் வகை கார், பத்து லட்சம் டாலர் ரொக்கம், கல்லூரி ஸ்காலர்ஷிப், இலவச பியர்கள் என அதிரடியான பரிசுகள் தான். குலுக்கல் முறையில் இந்த பரிசுகள் கொடுக்கப்பட உள்ளன.
இந்த அதிரடி பரிசுத்திட்டம் குறித்து பேசிய கிழக்கு வெர்ஜினியா கவர்னர் ஜிம், ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்த தடுப்பூசி நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். மக்கள் வேகமாக தடுப்பூசி எடுத்துக்கொண்டு நாட்டையும், மக்களையும் காக்க வேண்டும். என்றார். அரசின் பரிசுத்திட்ட அறிவிப்புக்கு பிறகு பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியாவை பொருத்தவரை தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அடுத்தபடியாக சந்தைக்கு புதிய வரவாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி வரவுள்ளது. ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் இந்தியாவில் தொடங்குவதற்கு முன்பே பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியா 56.6 டன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளிலேயே இதுவே அதிகபட்சமான எண்ணிக்கையாகும். இதன்மூலம் இந்தியா முழுவதும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்தும் பணிகளை துவக்க தேவையான அளவு மருந்து தற்போது நம் கைவசம் உள்ளது எனக் கூறப்படுகிறது.
முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கைகள் தொடர்ந்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே மிக முக்கிய முன்னெச்சரிக்கையாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனாவை எளிதாக உலகைவிட்டே துரத்தி அடிக்கலாம் என கூறுகின்றன உலக நாடுகள்.மக்கள் அனைவரும் தாமகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதே அரசுகளின் கோரிக்கை.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்