ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து அருங்காட்சியம் சார்பில் நடத்திய ஆய்வில் அந்த நாட்டிலேயே மிகப்பெரிய டைனோசரின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த டைனோசர் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் டைனோசர் எலும்புகள் கண்டுபிடிக்கப்படும்போது நமக்கு அந்த விலங்கு தொடர்பான ஆச்சரியம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய வகை டைனோசர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த டைனோசர் ஆஸ்திரேலியன் கூப்பர் வகையை சேர்ந்தது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2006-ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் எரோமாங்கா பகுதியில் டைனோசர் தொடர்பான அகழ்வாராய்ச்சியை நடத்தி வந்தனர். அதில் இதுவரை ஜார்ஜ் மற்றும் ஷாக் என்ற இரு வகை பெரிய டைனோசர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் சூழலில் தற்போது அதே பகுதியில் இதுவரை ஆஸ்திரேலியாவிலேயே கண்டறியப்படாத மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர் 96 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது ஆஸ்திரேலியா அண்டார்ட்டிக் பகுதியுடன் இணைந்து இருந்தது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 1
எலும்பு மட்டும் 200 கிலோவா! இன்னும் இத்தனையா? : ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் படிமங்கள்!
இந்த கூப்பர் டைனோசரின் மொத்த எடை 69 டன் ஆக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஏனென்றால் தற்போது எடுக்கப்பட்டுள்ள டைனோசர் எலும்பு மட்டும் சுமார் 200 கிலோவிற்கு மேல் உள்ளது. இந்த டைனோசரின் இடுப்பு அளவு மட்டும் 5.6 முதல் 6 மீட்டர் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. அத்துடன் இதன் முழு உயரும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதன் உடல் அகலம் 25-30 மீட்டர் வரை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இதன் உடல் அகலம் ஒரு கூடைப்பந்து மைதானத்தின் அளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ராட்சத டைனோசர் உலகளவில் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்புகளில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு உலகத்தில் உள்ள மிகப்பெரிய டைனோசர்கள் அனைத்தும் தென் அமெரிக்க கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதுதான் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய ராட்சத டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசரின் வகையை உறுதிசெய்ய ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திணறியுள்ளனர்.
எலும்பு மட்டும் 200 கிலோவா! இன்னும் இத்தனையா? : ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் படிமங்கள்!
இதற்காக 3டி வடிவில் எலும்பின் மாதிரியை எடுத்து ஏற்கெனவே அருங்காட்சியகங்களில் உள்ள டைனோசர் மாதிரியுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அதன் முடிவில் இது ஆஸ்திரேலிய கூப்பர் வகையை சேர்ந்தது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். இது 16 ஆண்டுகளுக்கு மேலாக டைனோசர் தொடர்பான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ஆராய்ச்சியாளர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கருதுகின்றனர்.
Comments
Post a Comment