நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாப்பு -விஞ்ஞானிகள் தகவல்

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மனிதகுலத்தை மிரட்டிவரும் கொரோனா வைரஸ், புதிது புதிதாகவும் உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ்-கொரோனா வைரஸ் 2’ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வகை, இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார்.

இப்போதைக்கு புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ள

பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 96 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும், அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 92 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்