நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வடகொரியாவில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு: ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300க்கு விற்பனை

வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.
பியாங்யாங், ,

வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது கிம் ஜாங் அன் இதனை தெரிவித்தார்.


“நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது” என கூறிய கிம் ஜாங் அன், “கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளி மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாய துறை உற்பத்தி இலக்கை அடையவில்லை” எனவும் தெரிவித்தார். 

இதனிடையே வட கொரியாவில் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,300) விற்கப்படுவதாக அந்நாட்டின் ஊடகங்கள் கூறுகின்றன.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!