நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

4,000 புத்தகங்கள் உள்ள வீட்டு நூலகம் - இணையத்தில் வைரலான புகைப்படங்கள்

 புத்தகங்களை சேகரிப்பது நல்ல விஷயம் என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அதனை உபயோமாக பயன்படுத்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட வீட்டு நூலக புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்றால், படிப்பது மட்டுமே பொழுதுபோக்கு என இருப்பவர்கள் என்றால் நிச்சயம் இந்த புகைப்படம் உங்களை ஈர்க்கும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவில் வீட்டில் முடங்கிய மக்களில், பெரும்பாலானோருக்கு நேரத்தை எப்படி கழிப்பது என தெரியவில்லை. சின்ன சின்ன விளையாட்டுகளை விளையாடிய அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் போர் அடித்து, அடுத்த ஒன்றை தேடத் தொடங்கினர். சின்ன சின்னை விளையாட்டுகள், ஆன்லைன் கேம்கள் என என்பது மட்டுமே அவர்களின் பொழுதுபோக்காக மாறியது.

சிலர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுவதுமாக அடிமையாக பணத்தை இழந்த செய்திகளை எல்லாம் படித்திருப்போம். ஆனால், படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளாக அமையும். புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களை திருப்பும்போது புதிய அனுபவமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதால், அதனை கீழே வைக்கக்கூட மனமில்லாமல், ஒரே சிட்டிங்கில் புத்தக்கத்தை படித்து முடிப்பவர்களும் இருக்கிறார்கள். லாக்டவுனில் புதிய வாசிப்பாளர்களும், புத்தகப் பிரியர்களும் உருவாகியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆன்லைன் கேம்கள் மூளைக்கும், மனதுக்கு தேவையற்ற பதற்றத்தை கொடுப்பது மட்டுமில்லாமல், பணத்தை செலவழிக்கவும் வைக்கிறது.

ஏற்கனவே வீட்டில் இருப்பவர்களுக்கு இது பொருளாதார நெருக்கடியாகவும் மாறியது. இந்நிலையில், தன் வீட்டில் இருக்கும் நூலகத்தை புகைப்படம் எடுத்த நெட்டிசன் அவைஸ் கான், அதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லாக்டவுன் காலங்களில் இந்த இடத்திலேயே தன்னுடையை முழு நேரத்தையும் செலவிடுவதாகவும் கூறியுள்ளார். அண்மையில், நூலகத்தில் இருக்கும் புத்தகத்தை முழுமையாக எண்ணி முடிந்திருப்பதாக கூறிய அவர், சுமார் 4 ஆயிரம் புத்தகங்கள் தற்போது தன்னிடம் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 12 மணி நேரத்துக்குப் பதிலாக 24 மணி நேரமும் அங்கு இருப்பதாக கூறியுள்ள அவர், இங்கிருக்கும் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டேன் என எண்ணிவிடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். தனக்கு புத்தகங்கள் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், அதனடிப்படையில் புத்தகங்களை சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அந்த இடத்துக்கு சென்றால் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இயல்பாக எழுவதாகவும் அவைஸ்கான் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவுக்கு பதில் அளித்துள்ள மற்ற நெட்டிசன்கள், தங்களது வீட்டில் இருக்கும் நூலகங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர். அவைஸ்கான் போலவே மற்றொரு நெட்டிசனும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து அலமாரியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இன்னும் சில நெட்டிசன்கள் புத்தக அலமாரியை பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். புத்தகங்களை சேகரிப்பது நல்ல விஷயம் என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அதனை உபயோமாக பயன்படுத்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவைஸ் கான் வைத்திருக்கும் புத்தங்களில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களையாவது படித்திருந்தால் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருப்பார் என எண்ணிப் பாருங்கள் என நெட்டிசன் ஒருவர் வியந்துள்ளார்.


ALSO READ :



Comments

Popular posts from this blog

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!