நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

95 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாவரவகை டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

 எலும்புகளின் பூர்வாங்க கண்காணிப்புகளின்படி, அவை ஒரு சவுரோபாட் என்பதை வெளிப்படுத்துகின்றன. இதனை "ஒரு பெரிய தாவர உண்ணும் டைனோசர்" என்று ஆராய்ச்சிக்குழுவின் இயக்குனர் விளக்கினார்.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆஸ்திரேலியவின் அவுட்பேக் பகுதியில் புதைக்கப்பட்ட சில எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு புதிய தாவர வகை டைனோசராக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்துள்ளனர். அவுட் பேக் என்பது ஆஸ்திரேலியாவின் உள்துறை மற்றும் தொலைதூர கடற்கரைகளை உள்ளடக்கிய பரந்த, மக்கள்தொகை இல்லாத மற்றும் முக்கியமாக வறண்ட பகுதிகளுக்கான பேச்சுவழக்கு பெயர் ஆகும். ஆய்வாளர்கள் மே 25ம் தேதி அன்று தென்மேற்கு குயின்ஸ்லாந்தின் ஈரோமாங்காவின் சுட்ட சிவப்பு களிமண்ணிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் கடலில் இருந்து மிக தொலைவில் உள்ள நகரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எலும்புகள் சுமார் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று  ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது. இது குறித்து, ஈரோமாங்கா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குநரும், பழங்காலவியலாளருமான ராபின் மெக்கன்சி 9 நியூஸ்க்கு அளித்த பெட்டியில் தெரிவித்ததாவது, "ஆஸ்திரேலியா, கோண்ட்வானா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து மிக நீண்ட காலமாக பிரிந்திருப்பதால், நாட்டில் காணப்படும் டைனோசர்கள் தொடர்பான எச்சங்கள் பெரும்பாலானவை அறிவியலுக்கு புதியது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டைய காலங்களில் இந்தியா, ஆப்பிரிக்கா, அரேபியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, மடகாஸ்கர் மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றைக் கொண்ட ஒரு சூப்பர் கண்டமாக கோண்ட்வானா இருந்தது. இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்தது. பிறகு இந்த நாடுகளின் பிரிவின் முதல் கட்டம் சுமார் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இனம் புதிய வகையாக இருக்கப்போகிறது என்று மெக்கன்சி எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இருப்பினும், இது நிறுவப்படுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும், ஏனெனில் எலும்புகள் அருங்காட்சியகத்தில் பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும் அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் டைனோசரின் முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பின் எலும்பு கூறுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், எலும்புக்கூட்டின் கூடுதல் பிரிவுகளைக் கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஏனெனில் இப்போது கிடைத்த எலும்புகள் 3.3 அடி ஆழத்தில் கிடைத்தவை. அதிலும் அவர்கள் கடந்த வாரம் மட்டுமே தோண்டத் தொடங்கினர்.

 அப்பகுதி முழுவதும் தோண்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. எலும்புகளின் பூர்வாங்க கண்காணிப்புகளின்படி, அவை ஒரு சவுரோபாட் என்பதை வெளிப்படுத்துகின்றன. இதனை "ஒரு பெரிய தாவர உண்ணும் டைனோசர்" என்று ஆராய்ச்சிக்குழுவின் இயக்குனர் விளக்கினார். சவுரோபாட் வரலாற்றில் மிகப்பெரிய விலங்கு என்று பிரிட்டானிக்கா அமைப்பு கூறியுள்ளது. அவற்றிக்கு நீண்ட கழுத்து, சிறிய தலைகள் மற்றும் சிறிய கால்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ALSO READ : மீன் கடையில் இருந்த அரிய வகை நண்டு - கடல்வாழ் உயிரினத்துறையிடம் ஒப்படைத்த சமையல் கலைஞர்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்