நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மீன் கடையில் இருந்த அரிய வகை நண்டு - கடல்வாழ் உயிரினத்துறையிடம் ஒப்படைத்த சமையல் கலைஞர்!

 மீனவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அந்த நண்டுகள் அரிய வகை நண்டுகள் என கண்டுபிடித்துள்ளார்.


இங்கிலாந்தில் உள்ள மீன் விற்பனை கடை ஒன்றில் மிகவும் அரிய வகை நண்டுகளை பார்த்த சமையல் கலைஞர், தன்னுடைய சொந்த முயற்சியால் காப்பாற்றியுள்ளார்.

சமையல் கலைஞர் ஒருவர், லெய்செஸ்டரில் உள்ள மேக்ரோ மீன் மற்றும் நண்டு மொத்த விற்பனை நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு கண்ணாடி குடுவையில் இருந்த நண்டுகளைப் பார்த்த அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்துள்ளது. இரு நண்டுகளும் வழக்கமாக இருக்கும் நண்டுகளைப் போல் இல்லாமல் ஆரஞ்சு கலரில் வித்தியாசமாக இருந்துள்ளது. இவருக்கும் மீன் மற்றும் நண்டுகளை பிடிப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் இருந்ததாலும், மீனவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அந்த நண்டுகள் அரிய வகை நண்டுகள் என கண்டுபிடித்துள்ளார்.
சுமார் 1 கோடி நண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு நண்டுகள் மட்டுமே இந்த வகை இனங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மிகவும் அரியவகை நண்டு என்பதை உணர்ந்த அவர், உடனடியாக கடைக்காரரை சந்தித்து அந்த நண்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்த நண்டுகளுக்கான தொகையையும் கொடுத்து, அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் இங்கிலாந்து கடல்வாழ் உயிரினத்துறையிடம் ஒப்படைத்துள்ளார். ஜோசப் என்ற அந்த சமையல் கலைஞரின் செயல் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து பேசிய ஜோசப், " நான் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறேன். இதனால் மீன்கள் மற்றும் நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தெரியும். எனக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களுடன் தொடர்பு இருக்கிறது. ஓய்வு நேரங்களில் மீன் பிடிக்க சென்றுள்ளேன். வழக்கமாக, லெய்செய்ஸ்டர் நகரில் உள்ள மீன் மற்றும் நண்டுகளை விற்பனை செய்யும் மேக்ரோ கடைக்கு சென்றேன். அப்போது, திடீரென ஆரஞ்சு நிற ஓடுகள் என் கண்களில்பட்டன. உற்றுப்பார்த்தபோது, நண்டு என அறிந்து கொண்டேன். ஆரஞ்சு நிறத்தில் இருந்ததால், நிச்சயமாக அந்த நண்டுகள் அரிய வகை நண்டுகளாக இருக்க வேண்டும் என நினைத்தேன். கடை மேனேஜரிடம் சென்று அந்த நண்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், அதற்குரிய பணத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தேன். எனக்கு தெரிந்த மீனவர்களிடமும் அந்த நண்டுகளைப் பற்றி கேட்டபோது, அரிய வகை நண்டுகள் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர், மேக்ரோ மீன்விற்பனை நிலையத்துக்கு சென்று 25.50 டாலர் கொடுத்து இரண்டு நண்டுகளையும் வாங்க முடிவெடுத்தேன். மேலும், அந்த நண்டுகளின் பின்புலத்தையும் மேனேஜரிடம் தெரிவித்தபோது, அவர் பணம் வாங்கிங் கொள்ளலாம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பிரிமிங்காமில் உள்ள கடல்வாழ் மையத்துக்கு கொடுக்க ஒப்புக்கொண்டார்" எனத் தெரிவித்தார். இதனை மேக்ரோ ஏஜென்சி மேனேஜரான அந்தோணியும் தெரிவித்தார். அரியவகை நண்டுகளை பாதுகாத்த ஜோசப்புக்கும், மேக்ரோ ஏஜென்சி நிர்வாகத்துக்கும் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் நன்று தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்