உயிர் வாழ முடியாத கிரகமாக வீனஸ் மாறியது ஏன் - ஆராய்ச்சிக்காக இரு மிஷன்களை திட்டமிட்டுள்ள நாசா!
- Get link
- X
- Other Apps
சூரிய மண்டலத்தில், வாழக்கூடிய முதல் கிரகமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பும் வீனஸின் வரலாற்றைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள நாசா 2 மிஷன்களை மேற்கொள்ள உள்ளது.
ஆங்கிலத்தில் வீனஸ் (venus)என்றழைக்கப்படும் கோளின் தமிழ் பெயர் வெள்ளி. சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ளது இந்த கோள். பகலில் சூரியனுக்கு பின் இரவில் நம் கண்ணிற்கு தென்படும் நிலவுக்கு அடுத்து வெள்ளி கோளே மிகுந்த ஒளி மிக்கது. சூரிய குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளி. இதன் வெப்ப சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
வெள்ளியானது பூமிக்கு மிக அருகில் உள்ளது. மேலும் புவியை ஒத்த கோள் ஆகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" என்றும் குறிப்பிடப்படுகிறது. பூமி மற்றும் வெளி கிரகங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் பல தகவல்களை வீனஸ் கோள் தன்னுள் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. சூரிய மண்டலத்தில், வாழக்கூடிய முதல் கிரகமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பும் வீனஸின் வரலாற்றைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள நாசா 2 மிஷன்களை மேற்கொள்ள உள்ளது.
இந்த இரு திட்டங்களின் முக்கிய நோக்கம், பூமியை போலவே பல குணாதிசயங்களை கொண்டிருக்கும் வீனஸ் எப்படி ஒரு உயிரினங்கள் வாழ முடியாத கிரகமாக மாறியது என்பதை பற்றி புரிந்து கொள்வதை பற்றியது. பூமிக்கு அருகிலுள்ள வீனஸ் கோள் எப்படி உயிர்கள் வாழ இயலாத அளவிற்கு வெப்பமாக மாறியது உள்ளிட்ட பல காரணிகள் குறித்து இந்த மிஷனின் போது ஆராய நாசா திட்டமிட்டுள்ளது. பூமியின் அருகிலுள்ள வெள்ளி கோள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இரண்டு தனித்தனி மற்றும் லட்சிய ஆழமான விண்வெளி பயணங்களுக்கான திட்டங்களை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் தலைவர் பில் நெல்சன் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
2028 - 2030-ம் ஆண்டுகளுக்கு இடையில் வீனஸ் கிரகத்திற்கு DAVINCI + மற்றும் VERITAS ஆகிய இரு மிஷன்கள் (பயண திட்டங்கள்) செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயண திட்டங்கள் பூமியின் அருகிலுள்ள வீனஸ் கோள் எப்படி உயிரினங்கள் வாழ முடியாத கிரகமாக மாறியது என்பதை பற்றி அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 500 மில்லியன் டாலர் நிதி இந்த பயண திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த இரு மிஷன்களும் 2028-2030 காலக்கெடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் DAVINCI+ மிஷன், ஆழமான வளிமண்டல வீனஸ் நோபல் வாயுக்கள், வேதியியல் மற்றும் இமேஜிங் பற்றிய விசாரணை, வீனஸின் முதன்மையாக கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தின் கலவை குறித்து மேலும் விவரங்களை சேகரிக்கும். இது கிரகத்தின் tesserae-ன் முதல் உயர் தெளிவுத்திறன் படங்களையும் காண்பிக்கும். மற்றொரு மிஷனான VERITAS, வீனஸ் எமிசிவிட்டி, ரேடியோ சயின்ஸ், இன்சார், டோப்போகிராஃபி மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆகியவற்றின் சுருக்கமாகும். இந்த திட்டம் வீனஸ் மேற்பரப்பை சுற்றுப்பாதையில் இருந்து மேப் செய்வதோடு, கிரகத்தின் புவியியல் வரலாற்றை ஆராயும்.
தவிர முப்பரிமாண கட்டுமானங்களை உருவாக்கப் பயன்படும் ரேடார் வடிவத்தைப் பயன்படுத்தி, இது மேற்பரப்பு உயரங்களை பட்டியலிடும் மற்றும் எரிமலைகள் மற்றும் பூகம்பங்கள் இன்னும் வீனஸ் கிரகத்தில் நிகழ்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தும். இது பாறை வகையை தீர்மானிக்க இன்ஃப்ரா ரெட் ஸ்கேனிங்கை பயன்படுத்தும். இந்த பணி நாசா தலைமையில் இருந்தாலும், ஜெர்மன் விண்வெளி மையம் இன்ஃப்ரா ரெட் மேப்பரை வழங்கும்.
அதே நேரத்தில் இத்தாலிய விண்வெளி நிறுவனம் மற்றும் பிரான்சின் மையம் தேசிய டி எடூட்ஸ் ஸ்பேட்டெயில்ஸ் ஆகியவை ரேடார் மற்றும் பணியின் பிற பகுதிகளுக்கு பங்களிக்கும். ராக்கெட் லேப் அதன் தனித்துவமான வணிக நோக்கத்துடன் இந்த முயற்சியைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் தனது எலக்ட்ரான் ராக்கெட் மற்றும் அதன் ஃபோட்டான் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி வீனஸுக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீனஸ் கிரகத்தை ஆராய நாசா அறிவித்துள்ள இரு மிஷன்களும் ஒரு புதிய வடிவிலான கிரக வணிக ஆய்வுக்கு முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ : Facebook: குழந்தைகளை அச்சுறுத்தும் பதிவுகளை கட்டுப்படுத்த புதிய முறையை கொண்டு வந்த ஃபேஸ்புக்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment