நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Facebook: குழந்தைகளை அச்சுறுத்தும் பதிவுகளை கட்டுப்படுத்த புதிய முறையை கொண்டு வந்த ஃபேஸ்புக்!

குழந்தைகளுக்கு எதிரான அல்லது குழந்தைகள் பார்க்கக் கூடாத எந்த வீடியோவையும் பதிவுகளையும் மக்கள் பார்க்க நேர்ந்தால் அவர்கள் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து புகாரளிக்கலாம்.

குழந்தைகளின் நலன் கருதி பேஸ்புக் புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் பதிவுகள் குறித்து புகார் அளிக்கவும், இதுபோன்ற பதிவுகள் பகிரப்படாமல் தடுக்கவும் இது வகை செய்யும். இந்த புதிய முறை Report it, Don't SHare it என்று அழைக்கப்படுகிறது.

இதற்காக ஃபேஸ்புக் ஆரம்பா இந்தியா இனிஷியேட்டிவ் (Arambah India Initiative), Cyber Peace Foundation ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. இந்த புதிய முறையை விவரிக்க ஒரு அனிமேஷன் வீடியோ மூலம் குழந்தைகளை தவறாக சித்தரித்து வெளியிடும் பதிவுகளினால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவை விளக்கமாக கூறப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஃபேஸ்புக்கின் பாலிசி புரோகிராம்ஸ் தலைவர் மது சிரோஹி தெரிவிக்கையில், நாங்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறோம். அதற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம். குழந்தைகளை தவறான சித்தரிக்கும் வீடியோவை மக்கள் பார்வைக்கு வரும் முன் அதனை தவிர்க்க தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிற்காக நிறைய செலவிட்டு வருகிறோம். மேலும் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புகிறோம்.

குழந்தைகளுக்கு எதிரான அல்லது குழந்தைகள் பார்க்கக் கூடாத எந்த வீடியோவையும் பதிவுகளையும் மக்கள் பார்க்க நேர்ந்தால் அவர்கள் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து புகாரளிக்கலாம். அல்லது சைல்டு லைன் இந்தியா ஃபவுண்டேசன் என்ற அமைப்புக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் fb.me/onlinechildprotection என்ற பக்கத்திற்கு இது குறித்து புகாரளிக்கலாம்.

மேலும் பாலிவுட் நடிகை நேஹா துபியா இன்ஸ்டாகிராமில் ஃப்ரீடம் டு ஃபீட் (Freedom to Feed) என்ற பக்கம் மூலம் பெண்களின் பாதுகாப்பு குறித்து இயங்கி வருகிறார். அவருடன் இணைந்து பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வருடத் துவக்கத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் பதிவுகளை புரிந்துகொள்ள அதனை கண்காணித்தது. அப்போது 90 சதவிகித பதிவுகள் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்ட பதிவுகளை போலவே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதுவும் பெரும்பாலான பதிவுகள் குழந்தைகளை அச்சுறுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் என தெரியவந்துள்ளதாம். மேலும் ஃபேஸ்புக் Nudity and Sexual Activity என்ற கேட்டகிரியில் தற்போது Involves a Child என்ற புதிய ஆப்சனும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தைகளுக்கு எதிரான புகாரை மக்கள் தெரிவிக்க மக்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்பதால் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் தாக்கம் காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் தான் நடைபெறுகிறது. அதன் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். அவர்களுக்கு தவறான பதிவுகள் கண்ணில் பட வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் எப்பொழுதும் குழந்தைகளை கண்காணிக்க முடியாது. இந்த நேரத்தில் ஃபேஸ்புக்கின் இந்த புதிய முறை வரவேற்கத்தக்கதாக உள்ளது.


ALSO READ :

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்