முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்து, துன்பம் கொடுக்கும் வெற்றுக் கனவுகளை விடுத்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்போம்.
ஒரு ஊர்ல ஒரு பெண் இருந்தாங்க. அந்தப் பெண்ணுக்கு நிறைய செல்லவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. இருப்பதைக் கொண்டு ஒருநாளும் திருப்தி அடைந்தது இல்லை. எப்போதும், அவர்களிடம் இருப்பதைப் பற்றி அதிகமாக யோசிக்க மாட்டாங்க. இல்லாததைப் பற்றிதான் கவலை படுவாங்க. அதனால் தன் கணவன், பிள்ளைகளைப் பற்றி கூட அக்கறை காட்ட மாட்டாங்க.
அதே நேரம், ‘தான் ஒரு ராணிபோல வாழ வேண்டும்’ என்ற கனவில் இருப்பாங்க. ‘தனக்கு நான்கு ஐந்து சேவகர்கள் இருக்க வேண்டும்’. ‘விரும்பும் பொருள் உடனே கைக்கு வரவேண்டும்’. இப்படிப்பட்ட சிந்தனைகள்தான், அந்தப் பெண்ணுக்கு இருக்கும்.
ஆனால், அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதைப் பற்றியெல்லாம் அந்த பெண், கவலை படுவது இல்லை. ஆக, நடைமுறை உலகத்தைப் பற்றிய நினைவுகளை விடுத்து கனவுலகப் பெண்ணாக வாழ்ந்தார்.
அவர் அப்படி ஒன்றும் செல்வந்தர் வீட்டுப் பெண் அல்ல, சொந்த வீடோ போதிய வசதிகளோ கொண்ட குடும்பமும் அல்ல, அதேநேரம் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலை இல்லை. கணவரின் கடின உழைப்பால் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அந்தப் பெண் கணவரிடம் எப்போதும் சண்டைபோட்டுக் கொண்டே இருப்பார். தனக்கு ஆடம்பரமான பொருட்கள் வேண்டும் என்று நச்சரிப்பார். தன் மனைவியின் மனநிலையை அந்த கணவர் புரிந்து கொண்டதால், அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இப்படியாகப் போய்க்கொண்டு இருந்தது வாழ்க்கை, ஒரு நாள் அந்த கணவருக்க ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது. அதனால், சில மாதம் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதனால், அந்தப் பெண் வேலைக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அந்தப் பெண்ணின் சிந்தனை கனவுலகத்தில் இருந்து நனவுலகிற்கு வரத் தொடங்கியது.
‘இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது‘, ‘அரசனை நம்பி புருஷனை கைவிடக்கூடாது’ என்றெல்லாம் பழிமொழிகள் மூலம் மக்கள் இணக்கமான வாழ்க்கைக்கு எதிரான போக்குகளை கண்டித்தனர் என்பதை அந்தப் பெண் புரிந்து கொள்ளத் தொடங்கினாள்.
பின்னர், படிப்படியாக அந்தப் பெண்ணின் வெற்றுக் கனவுகள் கலையத் தொடங்கின. இந்த உலக வாழ்க்கையில் அவரின் சிந்தனை நிலை கொள்ளத் தொடங்கியது. ஆம், இது போன்று வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் சிலநேரம் நம் குணங்களை மேம்படுத்திக் கொள்ள, சிறந்த வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறது.
Comments
Post a Comment