நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிர தயாராக உள்ள ஒரே நாடு ரஷ்யா: அதிபர் புதின் பெருமிதம்

கொரோனா தடுப்பூசி தொழில்நுட்ப விவரங்களை பகிர தயாராக உள்ள உலகின் ஒரே நாடு ரஷ்யா என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
மாஸ்கோ,

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச செய்தியாளர்களுடன் காணொலி காட்சி வழியேயான சந்திப்பில் அதிபர் விளாடிமிர் புதின் பதிலளித்து பேசினார்.

இதில் அவர் கூறும்பொழுது, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் 66 நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. உலகில் உள்ள நாடுகளில் 

கொரோனா தடுப்பூசி தொழில்நுட்ப விவரங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், வெளிநாடுகளில் உற்பத்தியை விரிவாக்கம் செய்யவும் தயாராக உள்ள ஒரே நாடு ரஷ்யாவாகும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள சூழலில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

மராட்டியத்தின் புனே நகரில் பூனாவல்லா தலைமையிலான சீரம் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்பு ஆனது, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டி.சி.ஜி.ஐ.) அனுமதி கோரியது.

இதற்கு டி.சி.ஜி.ஐ. கடந்த 4ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இதன்படி, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியானது, உரிமம் பெற்ற ஹடாப்சர் நகரில் வைத்து மேற்கொள்ளப்படும். அதன்பின் உற்பத்தி செய்யப்படும். எனினும், தடுப்பூசி தயாரிப்புக்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்பொழுது, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது 91.6 சதவீதம் அதிக திறன் வாய்ந்தது. நாட்டில் பனாசியா பயோடெக் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணியை முன்பே தொடங்கி விட்டது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!