கண் நீர் அழுத்த நோயும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக் கூடிய பார்வை இழப்பும், கண்ணின் கருவிழியில் ஏற்படுகிற நோய் மற்றும் பிற காரணங்களாலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் முதியவர்கள் 65 சதவீதம் பேருக்கு கண்புரை நோய் இருக்கிறது. 18 சதவீதம் குழந்தைகள் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கண் நீர் அழுத்த நோயும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக் கூடிய பார்வை இழப்பும், கண்ணின் கருவிழியில் ஏற்படுகிற நோய் மற்றும் பிற காரணங்களாலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விழித்திரையில் உள்ள செல்கள் செயலிழந்தும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.
கண்புரை
மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடனடியாக பார்வையிழப்பு வர வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு ஒரே சிகிச்சை முறை என்பது கண்ணில் இருக்கக்கூடிய கண் புரையை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் செயற்கையாக கண்ணில் லென்ஸ் பொருத்தப்படும். இதன் மூலம் அவர்கள் பார்வையை முற்றிலுமாக திரும்ப பெற முடியும். கண்புரைக்கு அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே தீர்வு காணமுடியும். மற்ற சொட்டு மருந்து உள்ளிட்டவை பலன் தராது.
பார்வை இழப்பு
குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுவதற்கு, பிறக்கும்போதே கருவிழியில் இஞ்சுரீஸ் ஏற்படுவதே காரணமாகும். பள்ளிப்பருவத்தில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது வைட்டமின் ஏ குறைபாடால் ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்வை இழப்பு அதிகளவில் இருந்தது. ஆனால் தற்போது மத்திய மாநில அரசுகளின் பல்வேறு பள்ளி சிறார்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் அவை குறைந்துள்ளது.
எனவே மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கீரை வகைகள், காய்கறி வகைகள், முட்டை, மீன் போன்ற கண் பார்வைக்கு தேவையான அனைத்து சத்தான பொருட்களையும் கொடுப்பதன் மூலம் கண் பார்வை இழப்பை தடுக்கலாம்.
கோடை
கோடை காலங்களில் கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிக வெளிச்சம் உள்ள இடங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை பார்ப்பவர்கள் கவனமாக பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிய வேண்டும். கோடை வெயிலில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சாதாரண கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.
பார்வை குறைபாடு உள்ளவர்கள், தாங்கள் வழக்கமாக போடும் கண்ணாடியும், குறைபாடு இல்லாதவர்கள் கூலிங் கிளாஸ் உள்ளிட்ட கண் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம். கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் கண்ணில் அடிக்கடி தண்ணீர் வரக்கூடும். மேலும் தலை வலியும் ஏற்படக்கூடும். அவர்கள் ஒரு மணி நேர இடைவெளியில் கண்களை மூடித் திறந்து பார்த்து, தொடர்ந்து கணினியில் வேலை பார்க்காமல் இடைவெளி விட்டுவிட்டு பணிபுரிய வேண்டும். முக்கியமாக டி.வி., செல்போன் பார்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment