கோக் பாட்டிலை ஒதுக்கி வைத்த சம்பவத்திற்கு பிறகு இணையத்தில் வைரலாகும் ரொனால்டோவின் பழைய கோக் விளம்பரங்கள்
- Get link
- X
- Other Apps
ஐரோப்பிய நாடுகளில் தற்போது யூரோ 2020 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜூன் 14ம் தேதி அன்று யூரோ 2020 தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது கோகோ கோலா பாட்டில்களை ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பையும், நிறுவனத்திற்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.
மேலும், அவர் தண்ணீர் குடிக்க பரிந்துரைத்தார். அவரது அந்த தரமான சைகைக்கு பிறகு இணையத்தில் பல ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் வைரலாக பரவி வந்தன. இந்த நிலையில், பல ஆண்டுகள் முன்பு ரொனால்டோ அதே பிராண்டிற்கு சப்போர்ட் செய்வதை காட்டும் விளம்பரங்கள் மற்றும் கே.எஃப்.சி விளம்பரத்தில் தோன்றிய வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது யூரோ 2020 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்த்த அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (ஜூன்.14) ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகல் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.
அப்போது இருக்கையில் அமர்ந்த உடன் தனது மேசையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் பாட்டில்களையும் ஒதுக்கி வைத்து, பின்னர் தனக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை உயர்த்தி பிடித்து, "தண்ணீர் குடிங்க" என்று கூறினார்.
அவரது ஒரே ஒரு மூவ் சில நொடிகளில் உலகளவில் பெரிதும் பேசப்பட்டது. கோகோ கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு ‘தண்ணீர் குடியுங்கள்’ என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கோக்க கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. ரொனால்டோவின் அந்த ஒற்றை வார்த்தையால் கோகோ கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்தது.
மேலும் இது தொடர்பாக பல மீம்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பைக்கான போட்டியில், சீனாவில் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ரொனால்டோ நடித்த கோக் விளம்பரம் ஒன்று இப்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
அதில், எளிமையான சீன மொழியில் முத்திரை குத்தப்பட்ட கோக் கேன்களை பிடித்தவாறு போர்த்துகீசிய நட்சத்திரம் ரொனால்டோ ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருப்பார். குளிர்சாதன பெட்டியில் உள்ள ஐஸ் க்யூப் கொண்டு அவர் கால்பந்து விளையாடுவதை போன்று அந்த விளம்பரம் காட்டியுள்ளது.
இறுதியில் கோகோ கோலா சின்னம் மற்றும் உலகக் கோப்பை கோப்பையின் படத்துடன் விளம்பரம் முடிவடைகிறது. தற்போது குறைந்த தரம் வாய்ந்த இந்த வீடியோ பதிப்பு யூடியூப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2008ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இந்த பழைய விளம்பரம் வெளிவந்த பின்னர் ஜுவென்டஸ் பாசாங்குத்தனத்தை முன்வைத்ததாக சமூக ஊடகங்களில் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment