நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Xiaomi: பழைய மொபைல்களுக்கு கிராக்கி: முதலிடம் பிடித்த சியோமி!

 செகண்ட் ஹேண்ட் செல்போன் சந்தையை பொறுத்தவரை 26 சதவீத பங்களிப்புடன் சியோமி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. 20 சதவித பங்களிப்புடன் ஆப்பிள் நிறுவனம் 2வது இடமும் 16 சதவீத பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.


பழைய மொபைல்களுக்கான சந்தையில் ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களை பின்தள்ளி சியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியா, மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ளது. குறிப்பாக மொபைல் போன்றவற்றின் விற்பனை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திசையில் இருந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணி புரியும் சூழல், பள்ளிகள் விடுமுறை காரணமாக ஆன்லைனில் கல்வி கற்பது ஆகியவற்றால் ஸ்மார்ட்போன்களில் தேவை உயர்ந்துள்ளது. பலர் புதிய செல்போன்களை வாங்கினாலும்,  நடுத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் ஒரே வாய்ப்பாக செகெண்ட் ஹேண்ட் எனப்படும் பழைய மொபைல்களே உள்ளன.  இதன் காரணமாக இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் மொபைல்களில் விற்பனை கடந்த ஆண்டும் வளர்ச்சி பெற்றுள்ளது.

பழைய செல்போன்களை விற்பனை செய்யும் கேஷிஃபை தளம் , தனது தளத்தின் விற்பனை போன்றவற்றை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  சுமார் 4 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில்,  அதிகமான இந்தியர்கள் மடிகணினிக்கு பதிலாக ஸ்மார்ட் போன் வாங்கவே விரும்புகின்றனர் என்பது தெரியவந்தது.  இதேபோல், 84 சதவீதம் பேர் தங்களது செல்போன்களை, 14-18 மாதங்களில் மாற்றி புதியது வாங்கியுள்ளனர்.  கட்டணம் இல்லா ஈ.எம்.ஐ. வசதி, மாற்று உத்தரவாதம் ஆகிய வசதிகள் இதில் பெரும் பங்காற்றுகின்றன.

செகண்ட் ஹேண்ட் செல்போன் சந்தையை பொறுத்தவரை 26 சதவீத பங்களிப்புடன் சியோமி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. 20 சதவித பங்களிப்புடன் ஆப்பிள் நிறுவனம் 2வது இடமும் 16 சதவீத பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.   டெல்லி, மும்பை,பெங்களூரு, ஐதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் செகண்ட் ஹேண்ட் மொபைல் அதிகம் விற்பனை நடைபெறுகிறது.

2020ம் ஆண்டு விற்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் மொபைலின் சராசரி விலை ரூ.4,217 ஆகும். 10 ஆயிரம் ரூபாய் பட்டியலிலேயே அதிக மொபைல்கள் விற்பனையாகி உள்ளன.  3 ஆண்டுகள் பழமையான மொபைல்களே அதிகம் விற்கப்பட்டுள்ளன. ஆய்வில் இன்னொரு ருசிகர தகவலும் தெரியவந்துள்ளது. ஆண்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ள நிலையில், பெண்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்களது ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளனர்.


ALSO READ ;

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!