நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிங்கப்பூர்: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி பண்ணை திறப்பு

சிங்கப்பூரில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி பண்ணை திறக்கப்பட்டுள்ளது.
மேற்கு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய சக்தி பண்ணை காண்போரை வியக்க வைக்கிறது. ஒரு லட்சத்து 22 ஆயிரம் சூரிய சக்தி தகடுகளை கொண்டு 45 ஹெக்டேர் பரப்புக்கு பறந்து விரிந்திருக்கிறது இந்த சூரிய சக்தி பண்ணை. 5 நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தேவையான மின்சாரம் இதில் தயாரிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு 32 கிலோ டன் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கலாம் என இதனை அமைத்தவர்கள் கூறுகின்றனர். கட்டடங்களில் அமைப்பதை விட நீர்நிலைகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி தகடுகள் சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!