நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வானில் அதிசிய நிகழ்வு: இன்று ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் செவ்வாய், வெள்ளி

வானில் பல பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தான் காண முடியும்.
வாஷிங்டன்,

வானில் பல பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தான் காண முடியும். அந்த வகையில் தற்போது செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போலவும் தோன்றும். இந்த அரிய வானியல் நிகழ்வு இன்று வானில் தெரியும். இன்று மேற்கு வானில் இந்த அற்புதக் காட்சி தென்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என கூறுகின்றனர். ஆனால் பல மில்லியன் தூரம் இடைப்பட்ட இடைவெளி இருக்கும் என்று தெஇவித்துள்ளனர். 

செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்படும் என்றும் அன்று மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுபோல் கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியைத் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் பொதுமக்கள் வெறும் கண்களால் காண முடியும் என்றும் இதில் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேற்கு அடிவானம் தெளிவாகவும் மேகம் மறைப்பு ஏதும் இல்லாமல் தெரியக்கூடிய ஒரு இடத்தில் இருந்த இந்த நிகழ்வை காணமுடியும். சூரியன் மறைந்த பின்னர் வானத்தைப் பார்த்தால் இரண்டு கோள்களும் அடுத்தடுத்த நாட்களில் ஒன்றை ஒன்று நெருங்குவது தெளிவாக இருக்கும். ஜூலை 13 வரை ஒன்றையொன்று நெருங்கி வரும் கோள்கள் அதன் பின்னர் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் கண்டு ரசிக்கலாம். இந்த அரிய வானியல் நிகழ்வை நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்