கேமராவில் சிக்கிய அரியவகை கிளாஸ் ஆக்டோபஸ்..வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்....
- Get link
- X
- Other Apps
கடலுக்கடியில் மிக சாதாரணமாக நீந்தி கொண்டிருந்த ட்ரான்ஸ்பரென்ட் ஆக்டோபஸின் வீடியோ சமூக வலைதளங்களை தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கடலுக்கடியில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த குழு படம்பிடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும் கிளாஸ் ஆக்டோபஸின் வீடியோ நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. கடலுக்கடியில் மிக சாதாரணமாக நீந்தி கொண்டிருந்த ட்ரான்ஸ்பரென்ட் உடலமைப்பை கொண்டிருக்கும் உயிரினம் ஆச்சர்யத்தை மட்டுமே தருகிறது. இயற்கையின் படைப்பை நினைத்து பிரமிக்கவைக்கிறது.
இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிடியூட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. அதில், "கிளாஸ் ஆக்டோபஸ் என்பது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல அட்சரேகைகளில் உலகளவில் காணப்படும் ஆக்டோபஸின் ட்ரான்ஸ்பரென்ட் பெலஜிக் இனமாகும். இந்த ஆக்டோபஸின் ஒரே புலப்படும் அம்சங்கள் என்னவென்றால் அதன் பார்வை நரம்பு, கண் இமைகள் மற்றும் செரிமானப் பாதை (நடுவில் உள்ள வெள்ளித் துண்டு) ”என்று வீடியோவுடன் கேப்ஷன் செய்யப்பட்டிருந்தது.
இந்த வீடியோ மக்களை மெய்மறக்கச் செய்தது மற்றும் பலர் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் இந்த வீடியோ அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆச்சர்யப்படுத்துவதாக இருப்பதாகவும் தங்களது ரியாக்சன்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில் ஒரு யூசர் குறிப்பிட்டிருந்ததாவது, "அதை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது ஆனால் நிஜம் தானா என நம்ப முடியவில்லை" என கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு யூசர் "என்ன ஒரு அற்புதமான தோற்றமுடைய உயிரினம்" என்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் வீடியோ பதிவில் கமெண்ட் செய்திருந்த மூன்றில் ஒரு பகுதியினர் இதனை நம்பமுடியவில்லை என்றே கமெண்ட் செய்திருந்தனர்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment