நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

300 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்த பணத்தை வைத்து கணவன், மனைவி செய்த செயல்! நெகிழ்ச்சி தகவல்

 பிரித்தானியாவில் லாட்டரி குலுக்கல் மூலம் தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தொகையை வைத்து, அவர்கள் செய்துள்ள செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.


பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Sale நகரைச் சேர்ந்த தம்பதி Sharon(50)-Nigel(55). இந்த தம்பதிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு National Lottery draw(தேசிய லாட்டரி குலுக்கல்)-ல் 12 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் 3,26,04,94,849 கோடி ருபாய்) பரிசாக விழுந்துள்ளது.

ஆரம்பத்தில் இதை ரகசியமாக வைத்திருந்த இவர்கள், அதன் பின் இந்த பணத்தில் சிறு பகுதியை தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து உதவி செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன் பின்னரே இவர் லொட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற செய்தி வெளியாகிறது. தற்போது இவர்கள் தங்களுக்கு கிடைத்த லாட்டரி பரிசு மூலம், 30 குடும்பங்களுக்கு காசோலை மூலம் கொடுத்து உதவியுள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Nigel(55) ஹோட்டல் மேலாளராக வேலை செய்து வருகிறார். அப்போது தான் இவர்களுக்கு இந்த மிகப் பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இந்த அதிர்ஷ்டம் அடித்த நேரத்தில் Sharon தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், நாம் வைத்திருக்கும் இந்த தொகை ஒரு குடும்பம் அனுபவிக்க முடியாத அளவிற்கு பெரிய தொகை, மிகப் பெரும் அதிர்ஷ்டம் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

இதனால் அவர்கள் இந்த பணத்தை வைத்து நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கியவர்கள் போன்ற 30 பேருக்கு காசோலை மூலம் பணம் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து Sharon கூறுகையில், இதை நாங்கள் பெருமைக்காக செய்வது அல்ல, எங்களுடைய நெருக்கமானவர்களுக்கு செய்யும் உதவியாக நினைக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கு சென்று காசோலைகளை வழங்கினோம்.


ஒரு சின்னர் கார்டி சில வார்த்தைகளை எழுதி, அதன் பின் செக்கில்(காசோலை) குறிப்பிட்ட தொகைகள் போட்டு கொடுத்தோம் என்று கூறினார். Nigel தற்போது உள்ளூரில் இருக்கும் தொண்டு நிறுவனமான Stockdales-ன் தலைவராக உள்ளார்.

இந்த தம்பதிக்கு 15 வயதில் Reece மற்றும் 12 வயதில் Lewis என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியானவுடன் இதைக் கண்ட இணையவாசிகள் இவர்களின் இந்த மனதைக் கண்டு பாராட்டி வருகின்றனர். 


ALSO READ : மனித உடல்களை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கில்லர்! நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்.......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!