நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காற்றில் ஆடும் வீடு! ஆனால் 4 மாடி சொகுசு வீடு!! இது மாமர வீடு...

 மாமரத்தை வெட்டாமல் மரத்திலேயே கட்டப்பட்ட நவீன 4 மாடி வீடு!! 80 ஆண்டு மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டாமல் கட்டப்பட்ட மாமர வீடு இது...


உதயப்பூர்:

 வீடு கட்டுவதற்காக மரங்களையும் செடிகளையும் வெட்டுவது சாதாரணமான விஷயம். அதுமட்டுமல்ல, வீட்டின் கட்டுமானத்திற்கும் மரங்களை பயன்படுத்துகிறோம். இதனால் காடுகள் படிப்படியாக பூமியில் இருந்து மறைந்து வருகின்றன. 

ஆனால் மரத்தை வெட்டாமலேயே அந்த மரத்திலேயே கட்டியிருக்கும் அதிசய வீடு இந்தியாவில் இருக்கிறது. அதுவும் இது நான்கு மாடிகளில் கட்டப்பட்ட மாமர வீடு.


ஏரிகளின் நகரம் என்று புகழ்பெற்ற உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. குல் பிரதீப் சிங் என்ற ஐஐடி பொறியாளர், 2000-ம் ஆண்டு நான்கு மாடி வீட்டைக் கட்டினார். 80 வருடங்கள் பழமையான மாமரத்தை வெட்டாமல் அதன் மேல்தான் இந்த வீட்டைக் கட்டியுள்ளனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்த வீடு 'ட்ரீ ஹவுஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. காட்டில் வசிப்பவர்கள் கட்டுவது போல் மரத்தால் ஆன வீடாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.  இது ஒரு 'ஃபுல் ஃபர்னிஷ்டு' வீடு என்று சொல்லலாம். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த வீட்டைக் கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர் குல் பிரதீப் சிங், மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டவில்லை.


மரக்கிளைகளுக்கு ஏற்ப தன் கனவு வீட்டை வடிவமைத்திருக்கிறார் கே.பி.சிங். ஒரு மரக்கிளையை சோபா ஸ்டாண்டாகவும், ஒரு மரக்கிளையை டிவி ஸ்டாண்டாகவும் பயன்படுத்தினார். இந்த வீட்டில் சமையலறை, படுக்கையறை, குளியலறை, சாப்பாட்டு அறை, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.


சமையலறை, நூலகம், படுக்கையறை போன்றவற்றிலிருந்து மரக்கிளைகள் வெளியே வந்திருப்பதை படங்களில் காணலாம். இதன் காரணமாக, மரம் காய்க்கும் போது, ​​​​அது வீட்டிற்குள் தொங்குகிறது. வீட்டில் பல ஜன்னல்கள் நிறுவப்பட்டுள்ளன, இதனால் பல பறவைகள் வீட்டிற்குள் வருகின்றன.


கே.பி.சிங்கின் இந்த கனவு வீடு தரையில் இருந்து 9 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 40 அடி. இந்த வீட்டில் செய்யப்பட்ட படிக்கட்டுகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 4 மாடி வீட்டைக் கட்ட சிமென்ட் பயன்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். 


இந்த வீட்டை உருவாக்க எஃகு, செல்லுலார் மற்றும் ஃபைபர் தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசினால், இந்த வீடும் மரக்கிளைகளைப் போலவே ஆடும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்