நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கனவல்ல நிஜம்! 30 கோடி ரூபாய் வீடு இலவசம்........

 30 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வீடு இலவசம்..! படங்களைப் பார்த்தால் நம்ப முடியவில்லையா? கனவல்ல! நிஜம் தான்...  


கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் உள்ள வீடு உங்களுடையதாகவும் மாறலாம்! அதுவும் இலவசமாக!! வீட்டின் விலையோ 30 கோடிக்கு மேல்....

சொந்த வீடு என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இந்த கனவு, பலருக்கு வாழ்நாள் முழுவதும் கனவாகவே, கானல்நீராகவே இருந்துவிடுகிறது. ஆனால், அழகான வீடு, அதிலும் இலவசமாக கிடைக்கிறது என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்?

இன்று நகரங்களில் 2 படுக்கையறைகள் கொண்ட வீட்டின் விலை லட்சக்கண்க்கில் இருக்கும். ஆனால், 30 கோடிக்கு மேல் விலை மதிப்புள்ள ஒரு ஆடம்பர வீடு இலவசமாக கொடுக்கப்படுகிறது என்றால் அதைப் பற்றிய தகவல்களும் வைரலாவது இயல்பானதுதான்.. அது உங்களுடையதாக இருக்கலாம், அதுவும் இலவசமாக. அதிர்ச்சியடைவது இயற்கையானது. 

இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், ஏமாற்றுவேலையோ என்ற சந்தேகமும் தோன்றலாம். ஆனால், இது, இந்தியாவில் அல்ல, இங்கிலாந்தில் கொடுக்கப்படும் இலவச வீடு (Free House). இந்த ஆடம்பரமான வீடு, தனது எதிர்கால உரிமையாளர் யார் என்று தெரியாமல் காத்திருக்கிறது.

சரி இந்த வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா? 

இங்கிலாந்தின் லேக் மாவட்டத்தில் (Lake District) அமைந்துள்ள இந்த வீட்டிலிருந்து புகழ்பெற்ற வின்டர்மீரைப் (Windermere of England) பார்க்க முடியும். இந்த வீட்டில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.

இந்த ஆடம்பர வீட்டில் வீட்டில் சினிமா போன்ற பல ஆடம்பர வசதிகளும் உள்ளன. இந்த வீட்டின் விலை 3 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்திய ரூபாயில் வீட்டின் விலை (30,15,93,238) 30 கோடியே 15 லட்சத்து 93 ஆயிரத்து 238 ரூபாய்.

அனைத்து வசதிகளும் உண்டு

இந்த ஆடம்பரமான வீட்டில் மிகப்பெரிய மொட்டை மாடி, எதிரில் அற்புதமான ஏரி, வசதியான லாக் ஃபயர், சினிமா ஹவுஸ், நீராவிக் குளியல் அறை, அதிநவீன உடற்பயிற்சி கூடம், தோட்டம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வின்டர்மியர் நிலையத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இந்த வீடு அமைந்துள்ளது.
இந்த ஆடம்பரமான வீட்டை எவ்வாறு பெறுவது?  அதிர்ஷ்ட குலுக்கல் (online lucky draw) மூலம் இந்த வீடு ஒரு அதிர்ஷ்டசாலிக்குக் கிடிஅக்கும். அதிர்ஷ்ட குலுக்கலில் வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இந்த வீடு பரிசாக கிடைக்கும். 

இந்த டிராவில் பங்கேற்க 10 பவுண்டுகள் மட்டுமே கட்டணம். 10 பவுண்டுகள் அதாவது சுமார் 1,005 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினால் வீடு வெல்லும் வாய்ப்பு உண்டு. ஒமேஸ் மில்லியன் பவுண்ட் ஹவுஸ் டிரா (Omez's million-pound house draw) நிறுவனம் இந்த லக்கி டிராவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் ஏழாவது டிராவின் ஒரு பகுதியாகும்.

இந்த பரிசில்,அனைத்து முத்திரைத் தீர்வை மற்றும் கட்டணங்களும் (stamp duty and legal charges) உள்ளடங்கியிருப்பதால், வெற்றி பெற்றவர்களுக்கு ஒற்றை ரூபாய் கூட செலவில்லை. 

வீடு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு, இந்த மாளிகையுடன் சேர்த்து 20,000 பவுண்டுகள் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த வீட்டில் வசிக்க விரும்பவில்லை என்றால், வாடகைக்கு கொடுக்கலாம். இந்த வீட்டை வாடகைக்கு விட்டால் என்ன வாடகை கிடைக்கும் தெரியுமா? வாரத்திற்கு £6,000 முதல் £8,000!  

லக்கி டிராவின் நோக்கம் 

Alzheimer's Research UK என்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நிதி திரட்ட இந்த  லக்கி டிரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்சைமர் தொடர்பான ஆராய்ச்சிக்கான விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்ட உதவும் திட்டம் இது.

இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்க, www.omaze.co.uk வலைதளத்திற்கு செல்லவும். ஆன்லைனில் பங்கேற்பதற்கான கடைசி தேதி 2022 மார்ச் 27ம் தேதியாகும். மற்றும் தபால் மூலம் பங்கேற்க கடைசி தேதி 2022 மார்ச் 29 தேதியாகும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்