இனிமேல் தொலைக்காட்சியில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கலாம்!
- Get link
- X
- Other Apps
ஜப்பானை சேர்ந்த பேராசிரியரான ஹோமி மியஷிடா தொலைக்காட்சி திரையில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
Tasty TV என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது Hygienic Film என்ற ஒருவித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்படும், இதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும்.
இதன் மூலம் உணவுகளை சுவைக்கலாம் என ஹோமி மியஷிடா தெரிவித்துள்ளார், மேலும் வீட்டில் இருந்தபடியே உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வெளி உலகுடன் தொடர்பு கொள்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை வணிக ரீதியில் தயாரிக்கத் தொடங்கினால், 875 அமெரிக்க டொலர்கள் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சுவை சார்ந்து ஹோமி மியஷிடா பல சாதனங்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : 300 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்த பணத்தை வைத்து கணவன், மனைவி செய்த செயல்! நெகிழ்ச்சி தகவல்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment