சூரியனை அடைந்தது நாசாவின் விண்கலம்! வரலாற்று சாதனை.............
- Get link
- X
- Other Apps
சூரியனின் வளிமண்டலத்துக்குள் பார்க்கர் விண்கலம் (“Parker Solar Probe” )நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட பார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்புக்கு இடையே சென்று தரவுகளை திரட்டியுள்ளது. “Parker Solar Probe” என்ற இந்த ரோபோ விண்கலம் சூரியனை ஆராய்ச்சி செய்ய முதல் ஆய்வு விண்கலமாகும்.
“Parker Solar Probe” சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்து, சூரியனின் நுகள் மாதிரிகளை சேகரித்துள்ளது. இந்த விண்கலம் சூரியனின் வெப்பத்தை தாங்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட விண்கலமாகும்.
“Parker Solar Probe” விண்கலம் கடந்த 2018 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சூரியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விண்கலம் சூரியனின் மேல் வலயத்தை கடந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி தரவுகளை சேகரித்துள்ளது.
தரவுகளை ஆய்வு செய்து அவற்றை உறுதிப்படுத்த நாசா விஞ்ஞானிகளுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.
விண்கலம் மெதுவாக சூரியனை சுற்றி, அதனை அண்மித்தது. இந்த விண்கலம் மணிக்கு 6 லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது.
“Parker Solar Probe” விண்கலத்தை தயாரிக்க 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment