நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உச்சந்தலை அரிச்சிக்கிட்டே இருக்கா? இதை எப்படி போக்கலாம்?

 பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி உச்சந் தலை அரிப்பு ஏற்படுவது வழக்கம்.


து பொடுகு, பேன் தொல்லை போன்றவற்றின் காரணமாக இந்த உச்சந் தலை அரிப்பு ஏற்படலாம். உச்சந்தலை அரிப்பு தொடர்ச்சியாக இருந்தால், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லதாகும்.

அதிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தும் போது இந்த உச்சந் தலை அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.

  • ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டீஸ்பூன் நீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை கழுவவும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.

  • ஒரு தேக்கரண்டி புதினா எண்ணெய் உடன், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலையைக் கழுவி கொள்ளவும். இதன் பயன்களை முழுமையாகப் பெறுவதற்கு வாரம் இருமுறை இது போன்று செய்யலாம்.

  • கற்றாழை ஜெல்லை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும். பின்னர் அதனை தலையில் நேரடியாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடம் ஊறவைத்து, வெது வெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். இதுபோல வாரம் இருமுறை செய்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.   

  • வெங்காயத்தை நன்றாக அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றை சுத்தமான பருத்தித் துணியால் நனைத்து உங்கள் தலையில் தடவிக் கொள்ளவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து தலையை வெது வெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர இந்த உச்சந்தலை அரிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • வேப்ப இலைகளை நன்றாக வேகவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றை பிழிந்து தலையில் மசாஜ் செய்யவும். சுமார் 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவிக் கொள்ளவும் அல்லது தினசரி வேப்ப இலை ஜூஸ் அருந்துவது தலையில் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

  • தூங்க செல்வதற்கு முன் சிறிது ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடு செய்து தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். பின்னர் காலையில் வெதுவெதுப்பான நீரில் தலையை நன்றாக கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்வது இது போன்ற தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் வளர்க்க உதவும்.   



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்