Instagram Story அம்சத்தில் மாற்றம்! பயனர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி!
- Get link
- X
- Other Apps
Meta-வுக்கு சொந்தமான Instagram அதன் பொதுவான அம்சங்களில் ஒன்றான இன்ஸ்டா ஸ்டோரிஸ் (Instagram Stories) அம்சத்தில் புதிய மாற்றத்தை விரைவில் கொண்டு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Instagram-ல் போஸ்ட்கள் மற்றும் ஃபோட்டோக்கள் ஷேர் செய்யப்படுவதற்கு அடுத்து பயணங்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது Instagram Stories அம்சம் தான். ஆனால் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பெரிய குறை உள்ளது. பல யூஸர்கள் இதில் அப்டேட் வரும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை Instagram Stories ஆப்ஷனில் வீடியோ ஸ்டோரிஸ்களை போஸ்ட் செய்யும் போது ஒரு ஸ்டோரியின் டைம் லிமிட் 15 வினாடிகளாக மட்டுமே இருந்து வருகிறது. அதாவது 15 வினாடிகளுக்கு மேல் நீளம் கொண்ட வீடியோ கிளிப்ஸ்கள் தானாகவே பல அடுத்தடுத்த ஸ்டோரிஸ்களாக பிரிக்கப்படும்.
இது இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் ஒரு பெரிய குறையாகவே இருந்து வருகிறது.
இதே Meta-வுக்கு சொந்தமான பிரபல மெசேஜிங் ஆப்-பான WhatsApp தனது பயனர்களுக்கு வீடியோ ஸ்டேட்டஸ் டைம் ரேஞ்சை 30 வினாடிகளாக வைத்துள்ள நிலையில், அதே அளவு டைம் ரேஞ்சை இன்ஸ்டாவும் வழங்க வேண்டும் என்று பயனர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் Snapchat மற்றும் TikTok போன்ற போட்டியாளர்களுடன் போட்டியை கடுமையாக்கும் வகையிலும், தன் பயனர்களை திருப்தி படுத்தும் வகையிலும் ஸ்டோரிஸ் கிளிப்களின் டைம் ரேஞ்சை மாற்றி 60 வினாடிகள் அதாவது 1 நிமிடம் வரை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதிய மாற்றம் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஒரே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 60 நிமிட வீடியோக்களை பிரிக்காமல் வைக்க அனுமதிக்கும்.
துருக்கியில் உள்ள ஒரு இன்ஸ்டா யூஸரை மேற்கோள் காட்டி, 9to5Mac ஆல் இன்ஸ்டாவின் இந்த புதிய அப்டேட் முயற்சி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த புதிய மாற்றத்தைப் பற்றி மேம்படுத்தப்பட்ட சில நபர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்பிற்கு Instagram தற்போது நோட்டிபிகேஷன்கள் மூலம் அறிவிக்கிறது.
இந்த அம்சம் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக சோதனை கட்டத்தில் இருப்பதால் மற்ற நாடுகளில் இந்த அம்சம் பரவலான வெளியீட்டைப் பெறுமா என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
மற்ற அக்கவுண்ட்களை குறிப்பிடுவதை அல்லது போஸ்ட்டில் லொக்கேஷனை சேர்ப்பதை எளிதாக்கும் ஸ்டோரிஸ்களை போஸ்ட் செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட இன்டர்ஃபேஸையும் Instagram சோதித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ALSO READ : இனிமேல் தொலைக்காட்சியில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கலாம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment