வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!
- Get link
- X
- Other Apps
ஊட்டச்சத்து நிபுணர் புவன் ரஸ்தோகி தனது பதிவில் பழுப்பு அரிசி தொடர்பான பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நம் நாட்டில் அரிசி உணவை விரும்புவோரின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. அதுவும் தென்னிந்தியாவில் கோதுமை உணவை விட, அர்சி உணவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் அரிசியில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் வெள்ளை அரிசி மற்றும் பழுப்பு அரிசி இரண்டில் எது சிறந்தது என்ற குழப்பம் அடிக்கடி மக்களுக்கு ஏற்படுகிறது. இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் புவன் ரஸ்தோகி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மற்றும் பழுப்பு அரிசி என்றால் என்ன?
ஊட்டச்சத்து நிபுணர் புவன் தனது பதிவில், ‘ அனைத்து வெள்ளை அரிசிகளும் பாலிஷ் செய்யப்படுவதற்கு முன்பு பழுப்பு நிறமாக இருக்கும். பாலிஷ் செய்யப்படாத அரிசி தான் பழுப்பு அரிசியாக விற்கப்படுகிறது. தானியத்தை பாலிஷ் செய்யும்போது, தவிடு மற்றும் அதன் தோல் பகுதி அதிலிருந்து அகற்றப்படும். அரிசியின் தோல் பகுதியில் அதிக தாதுக்கள் மற்றும் தவிடு நார்ச்சத்து நிறைந்த பகுதியாகும். பாலிஷ் செய்த பிறகு, வெள்ளை அரிசியிலிருந்து நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அகற்றப்படுகின்றன. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.
பழுப்பு மற்றும் வெள்ளை அரிசி எது சிறந்தது?
ஊட்டச்சத்து நிபுணர் புவன் மேலும் எழுதுகையில், 'சமைத்த வெள்ளை அரிசியின் கிளைசெமிக் குறியீடு 70க்கும் அதிகமாகவும், பழுப்பு அரிசியின் கிளைசெமிக் குறியீடு 50 ஆகவும் உள்ளது'. இதன் பொருள் வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது பழுப்பு அரிசி இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்காது என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும். .
பெரும்பாலானோர் உணவில் வெள்ளை அரிசியை மட்டுமே விரும்பி உண்பதாகவும், இதனால் தேவையான அளவு நார்ச்சத்து உடலுக்குச் செல்வதில்லை என்றும் புவன் கூறுகிறார்.
ஊட்டச்சத்து நிபுணர் புவன் இது குறித்து மேலும் கூறுஇகையில், "1900 களின் முற்பகுதியில் பழுப்பு அரிசியுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியை அதிகமாக சாப்பிட்ட காரணத்தால் பெரிபெரி நோய் பரவத் தொடங்கியது, ஏனெனில் இது மக்களுக்கு வைட்டமின் பி 1 குறைபாட்டை ஏற்படுத்தியது. குறிப்பாக அரிசியை பிரதான உணவாக கொண்ட மக்கள் மத்தியில் இந்த நோய் அதிகம் ஏற்பட்டது’ என பதிவிட்டுள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment