நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Year Ender 2021: இந்த ஆண்டின் தலைசிறந்த உலக சாதனைகள்! நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா?

 நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் இவர்கள்.


2021ம் ஆண்டின் இறுதி நாட்களில் இருக்கிறோம். இந்த ஆண்டை சற்று பின்னோக்கிப் பார்த்தால், பல விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சில அதிசயமாக இருக்கலாம். இரண்டும் கலந்தும் இருக்கலாம், பல வினோத நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.

சரி, உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர்.

26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால் சிறியவராக இருந்தாலும், சாதிப்பதில் பெரியவராக இருக்கிறார். அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் (Shortest Bodybuilder World Record) என்ற சாதனையை பதிவு செய்துள்ளா.  3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனையாளர். பாடி பில்டிங்கை தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்ட இந்த சாதனை மனிதர், தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டார்.


தண்ணீரில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சு விடமால் இருந்த சாதனை

குரோஷியாவைச் சேர்ந்த 56 வயது நபர் வித்தியாசமான சாதனை (World Record) படைத்துள்ளார். புத்மிர் சோபத் (Budmir Sobat) என்பவர், தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார். இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு தான் செய்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு 24 நிமிடம் பிறகு 3  வினாடிகள் வரை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் தாக்குப்பிடித்த சாதனையாளராக இருந்த இவரின் சாதனை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.


நாக்கால் மின்விசிறியை நிறுத்தி சாதித்த பெண்

ஜோ எல்லிஸ் (Zoe Ellis) என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியை (FAN) நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோ, மின் விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இந்த சாதனை படைத்துள்ளார்.


7 வினாடிகளில் 10 முகமூடிகள் அணிந்து சாதனை

கொரோனாவின் வருகையால், முகக்கவசங்களை அணிய வேண்டியது கட்டாயமாக்கிவிட்டது.  மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட முகக்கவசம் அணிவதில் ஜார்ஜ் பீல்  சாதனை படைத்துள்ளார்.  முகத்தில் வேகமாக முகக்கவசம் அணிந்து சாதனை செய்தார். வெறும் 7.35 வினாடிகளில் 10 முகமூடிகளை முகத்தில் போட்டு உலக சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் ஜார்ஜ்.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவில் ஷார்ப் (Neville Sharp), 112.4 டெசிபல் ஒலி எழுப்பியதன் மூலம் பத்தாண்டுகள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.


நெவில் ஷார்ப், சராசரி மின்சார துரப்பணத்தை விட சத்தமாக ஒலி எழுப்பினார்.

 45 வயதான நெவில் ஷார்ப், தனது மனைவியின் விருப்பப்படி இந்த வித்தியாசமான சாதனைக்கு விண்ணப்பித்து உலக சாதனை படைத்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!