நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் 3 ‘பலே’ திருடர்கள்! வியக்க வைக்கும் ‘Money Heist’ கொள்ளை சம்பவங்கள்..!

 உலகின் ‘பலே’ திருடர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகள் ஆன பிறகும், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு திருடர்கள் பற்றிய எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. 


வாஷிங்டன்: 

காவல் துறையின் கண்ணில் மண்ணை தூவி வரும்  இந்த ‘பலே’ திருடர்களை நினைத்து உலகமே வியக்கிறது எனலாம். உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ஏஜென்சிகளால்  கூட இன்று வரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த செய்தியில், உலகின் மூன்று ‘ஸ்மார்ட்டான’ திருடர்களைப் பற்றியும், அவர்களின்  ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் நம்பர்-3  பலே திருடன்

டிபி கூப்பர் (DB Cooper) உலகின் மூன்றாவது புத்திசாலி திருடன். நவம்பர் 24, 1971 அன்று போயிங்-707 விமானத்தை டிபி கூப்பர் கடத்தினார். டிபி கூப்பர் வெடிகுண்டை ஏற்றிக்கொண்டு விமானத்தில் ஏறினார். முதலில் விமானப் பணிப்பெண்ணிடம் வெடிகுண்டு இருப்பதாகச் சொன்னார். இதையடுத்து விமானத்தின் பைலட்டுக்கு அனுப்பிய குறிப்பில் 4 பாராசூட் மற்றும் 2 லட்சம் டாலர் கொடுங்கள் இல்லையெனில் வெடிகுண்டு வைத்து விமானத்தை தகர்ப்பேன் என்று எழுதப்பட்டிருந்தது. அமெரிக்காவின் சியாட்டிலில் விமானத்தை தரையிறக்க செய்து, தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என பட்டியலிட்டார். சியாட்டிலில் தனது கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டதற்கு ஈடாக, டிபி கூப்பர் 36 பயணிகளை விமானத்தில் விடுவித்தார். இதைத் தொடர்ந்து விமானம் மெக்சிகோவிற்கு பறந்தது. அப்போது டிபி கூப்பர் விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து தப்பினார். இன்றுவரை அவர் பிடிபடவில்லை. அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

உலகின் நம்பர்-2  பலே திருடன்

அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள கார்ட்னர் அருங்காட்சியகத்தில் திருடிய இரண்டு திருடர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 1990 ஆம் ஆண்டு கார்ட்னர் அருங்காட்சியகத்திற்கு இரண்டு திருடர்கள் போலீஸ்காரர்களாக  அடையாளப்படுத்திக் கொண்டு வந்தனர். காவலாளியிடம் தான் சோதனை செய்ய வந்ததாக கூறினர். பின்னர், காவலாளியை கட்டி வைத்துவிட்டு, பலகோடி ரூபாய் மதிப்புள்ள 13 கலைப் படைப்புகளுடன் திருடர்கள் இருவரும் தப்பினர். 31 ஆண்டுகளாகியும், திருடர்கள் குறித்த துப்பும் கிடைக்கவில்லை. திருடப்பட்ட கலைப்படைப்புகளும் கிடைக்கவில்லை. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தொடர்ந்து விசாரணை விசாரித்து வருகிறது. திருடர்கள் குறித்த தகவல் கொடுப்பவருக்கு, 10 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 75 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.

உலகின் நம்பர்-1  பலே திருடன்

பலே  திருடர்களின் முடிசூடா மன்னன் மற்றும் நம்பர் 1  இடத்தில் இருப்பது ஹாரி வின்ஸ்டன் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். டிசம்பர் 2008 இல், பிரான்சின் பாரிஸில் உள்ள நகைக் கடையில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் புகுந்தனர். அப்போது ஒரு பெண் துப்பாக்கியையும், மற்றொரு பெண் தன் பையில் இருந்த கைக்குண்டையும் காட்டி பயமுறுத்தியுள்ளார். இவர்கள் நகைக்கடையில் இருந்து 108 மில்லியன் டாலர்களை திருடிச் சென்றுள்ளனர். ஆனால் இன்று வரை இந்த நான்கு பேரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.


ALSO READ : டிக்கெட் கவுண்டரில் ஸ்பைடர்மேன்க்கு வந்த சோதனை - வைரல் வீடியோ!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!