நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தலைக்கு குளிக்கும்போது முடி அதிகம் கொட்டுகிறதா? இப்படி செய்து பாருங்கள்

 தவறான முறையில் தலைமுடியைக் கழுவுதல் மற்றும் அதிகப்படியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முடி சேதத்திற்கு வழிவகுக்கும். 


  • கூந்தலை அழகாக வைத்திருக்க, கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியமாகும்.
  • தலைமுடியைக் கழுவுவதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது வெந்நீரையோ பயன்படுத்த வேண்டாம்.
  • உச்சந்தலையில் கண்டிஷனரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


கூந்தலை அழகாக வைத்திருக்க, கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். தவறான முறையில் தலைமுடியைக் கழுவுதல் மற்றும் அதிகப்படியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முடி சேதத்திற்கு வழிவகுக்கும். 

இதனால் கூந்தலில் பிரச்சனைகள் ஏற்படுவதோடு கூந்தலில் வறட்சியும் ஏற்படும். உங்கள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தலைமுடியை சுத்தம் செய்வதற்கான சரியான வழி

ஷாம்பூ கொண்டு தலைக்கு குளிக்கும்போது, அதிக தண்ணீர் விட்டு, முடியை சரியாக அலசுவது மிக அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறினால் முடிக்கு சேதம் ஏற்படலாம். ஷாம்பூ கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், முடியை நன்றாக சீர் செய்து நன்றாக மசாஜ் செய்யவும். 

தலைமுடியைக் கழுவுவதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது வெந்நீரையோ பயன்படுத்த வேண்டாம். இதனால் முடி வறண்டு போகலாம். சாதாரண நீரில் முடியைக் கழுவவும். மேலும், தினமும் தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளிப்பது நல்லது. 

கண்டிஷனரை பயன்படுத்துவதில் கவனம் தேவை

தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு, சரியான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். ஆனால் அதிக கண்டிஷனரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது முடியின் ஆழமான சீரமைப்பு அவசியம். உச்சந்தலையில் கண்டிஷனரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.

கூந்தலை இந்த வகையில் உலர விடவும் 

தலைமுடியை கழுவி கண்டீஷன் செய்த பிறகு சரியான முறையில் உலர்த்துவது மிக அவசியமாகும். எப்போதும் காட்டன் துணியால் முடியை நன்றாக உலர வைக்கவும். இது முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடி உடையாமல் பார்த்துக்கொள்ளும். துண்டு கொண்டு முடியை மிகவும் வேகமாக தேய்ப்பதை தவிர்க்கவும். அடிக்கடி டிரையரை பயன்படுத்துவதும் தவறு. இதன் வெப்பம் முடியை சேதப்படுத்தும்.

முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்ற கூந்தல் பராமரிப்புப்  பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் முடி சேதமடைகிறது. இவை முடியின் துளைகளை அடைத்து, முடி உதிர்வதற்கு காரணமாகின்றன.

நீண்ட நேரம் முடியை கழுவ வேண்டாம்

அதிக நேரம் தலைக்கு குளித்து, முடியை நீண்ட நேரத்திற்கு நீரில் சுத்தம் செய்தால், கூந்தல் நீண்ட நேரம் ஈரமாக இருக்கும். இதனால், முடி வலுவிழந்து உடையும்.


ALSO READ : முகத்தில் உள்ள கருமை நீங்க சூப்பர் டிப்ஸ்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்