நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இளம் நரைமுடி தொல்லையா? ஒரே வாரத்தில் சரி செய்ய இதை பண்ணுங்க

 இன்றைய காலக்கட்டத்தில், பல இளைஞர்களுக்கும் 20 வயதிலேயே நரைமுடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.


இதற்கு மரபணு காரணங்கள் இருக்கலாம், தற்போதைய காலகட்டத்தின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் ஆகும்.

இயற்கை வைத்தியம் வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக மாறாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பாட்டி வீட்டு வைத்தியத்தை பின்பற்ற வேண்டும்.


நெல்லிக்காய் பொடி

முதலில் ஒரு கப் நெல்லிக்காய் பொடியை எடுத்துக்கொண்டு சாம்பல் ஆகும் வரை சூடாக்கவும். அதில் 500 மிலி தேங்காய் எண்ணெய் கலந்து 20 நிமிடம் குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.

குளிர்ந்த பிறகு, அதை 24 மணி நேரம் விடவும். அதன் பிறகு காற்று புகாத பாட்டிலில் அடைக்கவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்யவும்.


கறிவேப்பிலை

ஒரு கொத்து கறிவேப்பிலையை கொண்டு, அதோடு 2 ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் பிரமி தூள் கலந்து அரைக்கவும்.

இதை முடியின் வேர்களை அடையும் வகையில் தடவவும். 1 மணி நேரம் விட்டு, பின்னர் ஷாம்பூவுடன் முடியை கழுவவும்.


தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை கொண்டு, எலுமிச்சை சாற்றை கலந்து, தலைமுடியில் தடவி வரவேண்டும். இவை இரண்டையும் இணைத்து ஒரு இரசாயன எதிர்வினை ஏற்படுகிறது,

இதன் காரணமாக முடி இயற்கையாகவே கருப்பாக மாறும்.


ப்ளாக் டீ

வெள்ளை முடியை கருமையாக்க சிறந்த வகையில் ஒன்று பிளாக் டீ. சில ப்ளாக் டீ இலைகளை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்யவும்.

பின் இந்த பேஸ்ட்டை எலுமிச்சையுடன் கலந்து தலைமுடியில் 40 நிமிடங்கள் வைத்திருக்கவும். இது உங்கள் தலைமுடியை கருமையாக்கும்.



ALSO READ : ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்? ஈஸியான வழிகள் இதோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்