நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முதல் அணுகுண்டு சோதனை..!

 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் காலை 5.30 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு நியூ மெக்ஸிகோவில் ஒரு காட்டுப் பகுதியில் நூறு அடி உயரமுள்ள எஃகு கோபுரத்தில் பொருத்தப்பட்டது.


அதை வெடிக்கச் செய்வதற்கான விசை சுமார் ஆறு மைல்களுக்கு அப்பாலுள்ள ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ‘டிரினிடி’ எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த அணுகுண்டு பரிசோதனை அதிகாலை நேரத்தில் செயல்படுத்தப்பட்டது. அணுகுண்டு வெடித்தபோது பல சூரியன்கள் ஒரே சமயத்தில் சேர்ந்து பிரகாசிப்பது போன்ற வெளிச்சம் ஏற்பட்டது.

அந்த வெளிச்சம் சுமார் 250 மைல்களுக்கு அப்பாலும் தெரிந்தது. வெளிச்சத்தைப் பார்த்தவர்கள் சில மணி நேரம் குருடர்கள் போன்று பார்வை இழந்து தவித்தார்கள். பல வர்ணங்கள் கலந்த பயங்கரமான அழகான நெருப்புக் கோளம் ஒரு மைல் தூரம் வரை பூமியின் மீது கவிழ்ந்து கொண்டிருந்தது. பூமி ஆடியது.

குண்டு பொருத்தப்பட்டிருந்த எஃகு கோபுரம் உருகி ஆவியாகிவிட்டது. ஒரு வெண்ணிறப் புகை மண்டலம் நாய்க்குடை உருவத்தில் கிளம்பி எழுந்து உயரே 40 ஆயிரம் அடி தூரம் சென்றது. சுற்று வட்டார மக்கள் மிகப்பெரிய இடி இடித்து, மிகப் பெரிய மின்னல் வெட்டியது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகள் அணுகுண்டு ரகசியம் வெளியாவதை விரும்பவில்லை. அவர்கள் ஓர் அறிக்கை விடுத்து அதில், ‘வெடி மருந்து கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது’ என்று பொய்யான தகவலைத் தெரிவித்தனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!