நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராஸ்பெர்ரி பழங்களின் நன்மைகள்

 ராஸ்பெர்ரி பழங்களின் நன்மைகளை பற்றி பார்ப்போம்...


ராஸ்பெர்ரி பழங்களில் நார்ச்சத்துகள் நிரம்பி உள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட பாலிபினால்களும் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்யும்.

ராஸ்பெர்ரி இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்களும் நிறைந்துள்ளன. சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதற்கு ஏற்ற பழம் இது.

நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி கண் சவ்வுகளை சுத்தம் செய்வதன் மூலம் கண் உலர்வில் இருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்த்தொற்று விகிதத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சேதமடைந்த சரும திசுக்களை சரி செய்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராடவும் செய்கிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்