நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

 பொதுவாக நம்மில் பலர் முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுப்பதில்லை.


சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம்.

ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது.

இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும். எனவே இவற்றை எளிய முறையில் கூட போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.


  • ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க ஆரம்பிக்கும்.

  • ஒரு சிறிய பவுலில் சிறிதளவு காய்ச்சாத பாலினை எடுத்து கொள்ளுங்கள். பின் அரை எலுமிச்சை பழத்தினை இந்த பாலில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு கை மற்றும் கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களிலேயே கை, கால்களில் உள்ள கருமைகள் நீங்க ஆரம்பிக்கும்.

  • கை கால் வெள்ளையாக இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள், அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கை மற்றும் கால்களில் உள்ள கருமை பகுதியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கை கால் கருமை நீங்கி, வெள்ளையாக மாறுவதை தாங்களே உணருவீர்கள்.

  • ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கருமையாக உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து கை கருமை நிறம் மாற ஆரம்பிக்கும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!