நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரமிக்கவைக்கும் பிரான்ஸ்.....

 உலக சுற்றுலா பயணங்களை விரும்புபவர்கள் பட்டியலில் நிச்சயம் பிரான்ஸ் நாடு இடம் பிடித்திருக்கும். அந்நாட்டின் தலைநகரான பாரீசில் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈபிள் டவர் மட்டும் அதற்கு காரணமில்லை. கலாசார ரீதியாகவும், பாரம் பரிய ரீதியாகவும் பல்வேறு அழகியல் அம்சங்களை தன்னத்தே கொண்டுள்ளது.


அதனால்தான் உலகிலேயே அதிக பேர் சுற்றுலா செல்லும் முதல் நாடாக விளங்குகிறது. கொரோனா காரணமாக முடங்கி போயிருந்த சுற்றுலா துறை மெல்ல மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் சுமார் 90 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பிரான்சுக்கு விஜயம் செய்ததாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சுற்றுலாவின் பங்களிப்பு 8 சதவீதமாக இருப்பதாக பிரான்சின் சுற்றுலாத் துறை குறிப்பிடுகிறது. உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பிரான்ஸை சுற்றி வர திட்டமிட்டால் அங்கு அவசியம் பார்க்க வேண்டிய 3 இடங்கள் உங்கள் பார்வைக்கு...

மார்சேய்:
பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மார்சேய், மிகப் பழமையான துறைமுக நகரமாகும். பிரமிப்பில் ஆழ்த்தும் அத்தனை அம்சங் களையும் அங்கு காணலாம். பழமையான துறைமுகம் என்று கருதி சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. நீர்முனை கபேக்கள், கடைகள், உணவகங்கள் என இந்த துறைமுக நகரம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்பட பல்வேறு வரலாற்று நினைவுச்சின்னங்களையும் கண்டு கழிக்கலாம்.

பாரீஸ்:
 ஒவ்வொரு ஆண்டும் பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் மொத்த சுற்றுலா பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாரீஸ் நகரை தவறாமல் பார்வையிடுகிறார்கள். அதனால் இது உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் நகரமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. சிட்டி ஆப் லவ், சிட்டி ஆப் லைட்ஸ் மற்றும் கேபிடல் ஆப் பேஷன் போன்ற பல மாற்று பெயர்களால் பாரீஸ் நகரம் அழைக்கப்படுகிறது. அதற்கேற்ப பழமை முதல் இன்றைய நவீன பேஷன் வரை அத்தனை விஷயங்களும் அங்கே இடம்பிடித் திருக்கிறது. ஈபிள் கோபுரம் மட்டுமே பாரீஸுக்கு புகழ் சேர்க்கவில்லை. நோட்ரே டேம் கதீட்ரல், வெர்சாய்ஸ் அரண்மனை, சேக்ரே-கோயர் போன்றவையும் பாரீஸ் நகரை பிரபலமாக்குகின்றன.

பிரஞ்சு ரிவியரா:
 இதுவும் அழகிய கடற்கரை நகரம்தான். கிழக்கில் இத்தாலிய எல்லையில் இருந்து மேற்கில் காசிஸ் வரை மலை, கடல், நில பரப்பு என அத்தனை இயற்கை அம்சங்களும் ஒருங்கே அமைந்து இந்த நகரத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. புகழ்பெற்ற ஓவிய கலைஞர் பிக்காசோ தனது கலைப்படைப்புக்கு இதனை உத்வேகமாக பயன்படுத்தினார் என கூறப்படுவதுண்டு. மொனாக்கோ, செயின்ட் ட்ரோபஸ், செயிண்ட்-பால் டி வென்ஸ் கிராமங்கள் மற்றும் கிராஸ் வாசனை திரவியங்கள் ஆகியவை பிரெஞ்சு ரிவியராவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடத்தப்படுவதும் பிரஞ்சு ரிவியராவை மேலும் பிரபலப்படுத்தி இருக்கிறது. உலகெங்கிலும் சிறந்த திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுவதால் திரைப்பட விமர்சகர்கள், திரை உலக கலைஞர்கள், பார்வையாளர்கள் அதிகம் வருகை தருகிறார்கள். இந்த இடங்களை தவிர ஒயின் ஆலைகள், பசுமை சூழ்ந்த இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை ஒருமுறை பார்வையிட்டாலே போதும். என்றென்றும் நினைவில் இருக்கும். இத்தகைய சுற்றுலாத் தலங்கள்தான் உலகில் அதிகம் பேர் பார்வையிடும் நாடாக பிரான்ஸை மாற்றுகின்றன.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்