நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் ஏலக்காய்… உங்க முகம் பொன் போல ஜொலிக்க இப்படியும் வழி இருக்கு!

சருமத்திற்கு அழகு சேர்க்கும் முக்கிய பொருட்களில் ஏலக்காய்க்கு தனி இடம் உண்டு.
பொதுவாக அனைவருமே தங்களது உடல் மற்றும் முகத்தை அழகாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பளபளப்பான சருமமும் அழகான தோற்றமும் தான் மற்றவர்கள் தங்களை பற்றி உயர்வாக நினைப்பார்கள் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதற்காக பலரும் விலை உயர்ந்த சரும பொருட்களை பயன்படுத்தி வருகினறனர்.

இந்த பொருட்களை பயன்படுத்தும்போது நல்லதாக இருந்தாலும், பகக் விளைவுகள் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் பலரும் தற்போது இயற்கையில் கிடைக்கும் சரும அழகு பொருட்களை நாடிச்செல்லும் பழக்கம் அதிகரித்த வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் விலை குறைந்ததாகவும் உள்ளது.

அந்த வகையில் சருமத்திற்கு அழகு சேர்க்கும் முக்கிய பொருட்களில் ஏலக்காய்க்கு தனி இடம் உண்டு. பொதுவாக இந்தியாவில் சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கிய மசாலா பொருளான ஏலக்காய் வைத்து சரும அழகிற்கு தேவையான கிரீம் தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

ஏலக்காய் – சிறிதளவு

கேரட் – 2

ஆலிவேர ஜெல் – சிறிதளவு

செய்முறை :

முதலில் ஏலக்காய் மற்றும் கேரட்டை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். இதில் கேரட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அடித்து எடுத்துக்கொள்ளவும். இதில் கால்கப் கேரட் சாற்றில், சிறிதளவு ஏலக்காய் நசுக்கி சேர்க்கவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து ஏலக்காய் கேரட்டில் நன்றாக கலக்கும் அளவுக்கு சுட வைக்கவும். அடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆலிவேர ஜெல் சேர்த்து தனியாக ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் கிரீம் ரெடியாகிவிட்டது.

பயன்படுத்தும் முறை

இந்த கிரீம் லேசாக ஜெல் போன்றுதான் இருக்கும். இந்த கிரீமை தினமும் தூங்க செல்லும் முன் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், வைத்துவிட்டு லேசாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் அப்படியே இருந்துவிட்டு முகத்தை கழுவி விட்டு தூங்க செல்லலாம். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். 12 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருவருமே பயன்படுத்தலாம்.

தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால், ணரு மாதத்தில் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளபளப்பாக மாறும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்