நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பார்த்தாலே பசி தீரும்! பரவசத்தால் உள்ளம் மகிழும்! உலக பிரபல உணவுகள்

 உணவு வயிற்றுக்கு மட்டுமல்ல, கண்ணுக்கும் நிறைவு தந்தால் அது மனதிற்கும் விருந்தாகும். மனதை மயக்கி வயிற்றை நிரப்பும் சில பிரபல உணவுகள் இவை...


  • நாவிற்கு மட்டுமல்ல கண்ணுக்கும் சுவையான உணவுகள்
  • உலக பிரபலமான உணவுகள்
  • எளிமையான ஆனால் கண்ணைக் கவரும் உணவுகள்

எந்தவொரு உணவையும் பார்க்கும்போதே சுவைக்கத் தூண்டினால், அதுவே உணவு சமைத்தவரின் பாதி வெற்றி... 

அழகான உணவுப் பொருட்கள் அனைவருக்கும் பேரழகைத் தருபவை. இவ்வளவு அழகான இந்த உணவுகளை பார்த்த்திருக்கிறீர்களா?


பழுத்த பெர்ரி மற்றும் பீட்ரூட் ஆகியவற்றால் செய்யப்பட்ட அழகான இந்த குமிழ் உணவை உருவாக்கியவர் அன்டோனி லூயிஸ் எடுரிஸ். ஒரு வருட பரிசோதனைக்குப் பிறகு, உருவாக்கபப்ட்ட உணவு, பார்க்கவும், ருசிக்கவும் அருமையான ஒன்று.  

Wind Crystal

பழம்பெரும் பிரஞ்சு சமையல்காரர் Pierre Gagnaire ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சர்க்கரை கலவையில் தண்ணீரைச் சேர்த்து உருவாக்கிய அழகிய மெரிங் உணவு இது. இதுவொரு அழகிய முட்டைக்காலம்....  


கார்கோயில்லோ

சூப்பர் செரிப்ரல் மைக்கேல் ப்ரேயால் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சாலட்டில், 60 விதமான காய்கறிகள், இலைகள், பூக்கள் மற்றும் விதைகள் உள்ளன.


செர்ரி தக்காளி பச்சடி

தொலைநோக்கு பார்வை கொண்ட செஃப் டேனியல் பேட்டர்சன், செர்ரி தக்காளி பெஸ்டோ மற்றும் தக்காளி ப்யூரியுடன் இந்த தக்காளி பச்சடியை சமைத்துள்ளார். 


ஆலிவ் எண்ணெயில் சமைத்த டுனா

கடல் உணவு தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்ற எரிக் ரிபெர்ட், ஆலிவ் எண்ணெயில் வதக்கிய வெள்ளை டுனாவின் இந்த உணவை ரசனையுடன் தயாரித்திருக்கிறார்.

கடல் பீன்ஸ், மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சில்லுகள் மற்றும் லேசான சிவப்பு-ஒயின் பியர்னைஸ் சாஸ் ஆகியவற்றுடன் பார்த்தாலே பசி தீரும் உணவு இது...


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!