நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இனி ஆரஞ்சு சாப்பிட்டு தோலை தூக்கிப் போடாதீங்க... சூப்பரா டீ போடலாம்!

 ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகின்றது.


இதில் டீ போட்டு குடிப்பதனால் இன்னும் பல நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாகஇந்த டீயில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றன.

இதில் நிறைய பெக்டின் காணப்படுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.


தேவையான பொருட்கள்


  • அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு
  • தண்ணீர் - 1 1/2 கப்
  • இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
  • கிராம்பு - 3
  • பச்சை ஏலக்காய் - 2
  • வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்


செய்முறை

  • ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள்.

  • இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

  • பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள். இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்