நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஐபோன் பயன்படுத்துபவரா? இந்த சூப்பரான Tricks பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.....

 ஐபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆப்பிள் ஐபோன் உபயோகப்படுத்துகிறவர்கள் சில டிரிக்ஸ்களை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.



ஆப்பிள் லோகோ

ஐபோனுக்கு பின்புறம் உள்ள ஆப்பிள் லோகோ வெறும் லோகோ மட்டும் கிடையாது ‘அதுக்கும் மேல’ என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பின்புறம் உள்ள ஆப்பிள் லோகோவை இரண்டு அல்லது மூன்று முறை தட்டினால் ஹோம் ஸ்கீரினை ஓபன் செய்வது, டார்ச், ஆக்டிவ் சிரி என பல அம்சங்களை அணுக முடியும்.


ஸ்கேன் வசதி

ஐபோனில் இருக்கும் வசதியிலேயே மிகவும் பயனுள்ளது என்றால் அது ஆவணங்களை ஸ்கேன் செய்வது ஆகும். இந்த வசதி மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்வதோடு மட்டுமின்றி, கோப்பை சேமிக்கும் முன்பு ரொட்டேட், கிராப், டிசைன் போன்ற பல விஷயங்களை செய்யலாம். 


கண்காணிக்கப்படுகிறீர்களா?

iPhone மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த அம்சத்தை செயல்படுத்த எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அமைப்பை (Setting) க்ளிக் செய்து, அதற்குள் பிரைவசி என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் லோகேஷன் சர்வீஸ் என்பதில் உள்ள Frequent Location என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களை யாராவது கண்காணிக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ளலாம்.


ஆப்களை தேர்வு செய்ய 3D டச் வசதி

பயன்படுத்தாமல் ஐபோனில் திறந்திருக்கும் ஆப்களை விரைவாக மூடவும், அணுகவும் இந்த வசதி பயன்படுகிறது. இதற்கு உங்களுடைய ஐபோனின் ஹோம் ஸ்கிரீனில் இடது விளிம்பில் அழுத்தி, உங்கள் விரலை திரையின் வலது பக்கமாக நகர்த்தவும். இது நீங்கள் பயன்படுத்தாத பயன்பாட்டிலிருந்து விரைவாக வெளியேற உதவும்.



ALSO READ ; கீறல் விழுந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!