நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இயற்கையின் 10 எல்லைக்கோடுகள்....

 எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை எது என்று எப்படி நிர்ணயம் செய்வது? இதோ... இயற்கையே நிர்ணயித்த, பூமியின் முக்கிய எல்லைக் கோடுகள்


1. மவுண்ட் எவரெஸ்ட் (நேபாளம் & சீனா)

உலகின் உயரமான மலை, கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த இடம் உள்பட பல்வேறு பெருமைகளை கொண்டது எவரெஸ்ட் சிகரம். நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைக்கோடும் இதுவே!

2. சாக்கடல், (இஸ்ரேல் & ஜோர்டான்)

உலகின் மிகத் தாழ்வான பகுதி, கடல் மட்டத்தில் இருந்து 400 மீட்டர் கீழே அமைந்துள்ளது. மற்ற கடல்களை விட 10 மடங்கு உப்பு அதிகமானது. அதனால் இங்கு யாரும் மூழ்க மாட்டார்கள். விரலை கூட அசைக்காமல் மிதக்க முடியும். இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு இயற்கை எல்லையாக அமைந்திருக்கிறது.

3. கபு தாஸ் அஹூல் அஸ், தென் ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனை இது. ஒரு புறம் இந்தியப் பெருங்கடலும் இன்னொரு புறம் அட்லாண்டிக் பெருங்கடலுமாக, இயற்கை எல்லைகளால் சூழப்பட்டுள்ளது!

4. ஃபுன்தா டீ தாரிப்பா, ஸ்பெயின்

ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அழகு சேர்க்கும் ஐரோப்பாவின் தெற்கு எல்லை. இந்த இடத்தில் நீங்கள் நின்றால், உங்களுக்கு இடது புறம் மத்திய தரைக்கடலும், வலது புறம் அட்லாண்டிக் பெருங்கடலும் உங்கள் முன் ஆப்பிரிக்காவின் மொராக்கோவும் இருக்கும்!

5. ஹுஷையா, அர்ஜென்டினா

ஹுஷையா, உலகின் தெற்கில் அமைந்த கடைக்கோடி நகரம் இது. தென் அமெரிக்காவின் தெற்கு எல்லை. இப்பகுதி அர்ஜென்டினாவின் வசீகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. ‘உலகின் முடிவு’ என்பது இதன் செல்லப் பெயர்!

6. கபு டா ரோக்கா, போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல்லுக்கு மட்டுமல்ல... ஐரோப்பாவுக்கும் இதுவே மேற்கு எல்லை. கடல் மற்றும் மலையின் அமர்க்களத் தோற்றமே, சுற்றுலாவாசிகளை அதிகம் கவர்கிறது.

7. பாயிண்டி தெஸ் அல்மாடீஸ்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு எல்லையை குறிக்கும் வகையில் இந்த எழில்மிகு கடல்புரம் அமைந்திருக்கிறது.

8. போவெட் தீவு, நார்வே

யாருமில்லாத தீவு ஒன்று வேண்டும் என்று தேடுபவர்களுக்கு ஏற்ற இடம் இது. கடலுக்கு நடுவே வெண்மையாக உறைந்து கிடக்கிறது ஒரு சிறிய தீவு. உலகின் நிலப்பரப்புகளில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. தென் அட்லாண்டிக் கடலில் இருக்கும் இதற்கு அடுத்த நிலப்பரப்பு என்பது 2,260 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது!

9. கேப் டெஸ்னிவ், ரஷியா

ரஷியா மற்றும் யுரேசியாவின் மேற்கு எல்லையும் அமெரிக்காவின் ஓர் எல்லையும் ஒரு ஜலசந்தியில் சந்திக்கின்றன. அலாஸ்காவில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் அமெரிக்காவின் மெயின்லாண்ட் முடிவடைகிறது. அதன் பிறகு ஜலசந்தியும், அதைத் தொடரும் கடலும், இரு நாடுகளின் எல்லைகளாக இருப்பது அதிசயமே.

10. தென் துருவம், அண்டார்டிகா

பூமியின் தெற்கு எல்லைக்கோடு அண்டார்ட்டிகாவில் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!