நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

24 வயதில் 22 குழந்தைகளை பெற்று கொண்ட இளம் பெண்....நம்ப முடிகிறதா?

 அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க்.

24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன.


நம்ப முடிகிறதா? எல்லாமே 2 வயதுக்கு கீழே தான் 

கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி) செலவு செய்துள்ளனர்.

கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாகி வருகின்றது.

கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.

இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான் என குறிப்பிட்டிருக்கின்றார்.

இப்போது புரிகின்றதா 24 வயதில் 22 குழந்தைகள் எப்படி என்று.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்