கொசு இந்த வகை பிளட் குருப்பை துரத்தி துரத்தி கடிக்குமாம்! கொசுக்கு இப்படி ஒரு டேஸ்ட் இருக்கா?
- Get link
- X
- Other Apps
கொசுக்களுக்கு 'o' வகை ரத்தம்தான் மிகவும் பிடிக்குமாம். மற்ற வகை ரத்தம் கொண்டோரை ஒரு முறைக் கடிக்கிறதென்றால் 'o' வகை இரத்தம் கொண்டோரை மட்டும் இரண்டு முறைக் கடிக்குமாம்.
அதுமட்டுமன்றி கொசுக்களுக்கு CO2 மிகவும் அவசியம்.
அதை அதிகமாக எந்த உடல் வெளியிடுகிறதோ அதுதான் கொசுக்களுக்கான ரத்த வங்கி.
அதாவது CO2வை அதிகமாக கொண்டோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆற்றல், ஜெனிடிக் போன்ற இதர சத்துக்கள் அதிகமாக இருக்குமாம்.
எனவே நீங்கள் எவ்வளவு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறீர்களோ அந்த அளவிற்கு கொசுக்களால் ஈர்க்கப்படுவீர்கள்.
அதனால்தான் கருப்பு, கருஞ்சிவப்பு என அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிந்தால் விரைவில் உங்களை சூழ்ந்துகொள்கிறது.
வெளிர் நிற ஆடைகளை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாதாம். எனவே கொசு கடிக்க நீங்கள் அணியும் ஆடையும் முக்கிய காரணம்.
அதேபோல் வெப்பம் நிலை அதிகம் கொண்ட உடலும் கொசுக்களுக்குப் பிடிக்குமாம். அவர்களுக்கு இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகவும், தோலிற்கு மிக அருகிலும் இருப்பதால் இரத்தத்தை எளிதில் உறிஞ்சுவிடலாம். இவை தவிர அதிக உடற்பயிற்சியால் உடல் சூடானாலும் கொசுக்களுக்குப் பிடிக்குமாம்.
மது குடித்திருந்தாலும் அவர்களை கொசுவுக்கு மிகவும் பிடிக்குமாம். இப்படி கொசுக்களுக்கும் சில டேஸ்ட் இருப்பதால்தான் கொசுக்கள் உங்களை மட்டும் டார்கெட் செய்கிறது.
கொசு கடித்தால் என்ன செய்யலாம்...
- கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு நிறத்தில் தழும்பும், அரிப்பும் ஏற்படும்.
- அந்த இடத்தில் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தோல் தோல் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
- கொசு கடித்தால் ஏற்படும் சிவப்பு தழும்பை போக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது.
- வாழைப்பழ தோலின் உள்பகுதியில் இருக்கும் இழைகளை தனியாக எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து குழைத்து கொசு கடித்த இடத்தில் பூச வேண்டும்.
- பின்னர் அதன் மேல் ஐஸ் கியூப்பை வைத்து பருத்தி துணியால் கட்டவேண்டும். கால் மணி நேரம் கழித்து கழற்றி விடலாம்.
- மிளகுக்கீரை எண்ணெய் இயற்கை பூச்சிக்கொல்லியாகவும், கொசு விரட்டியாகவும் பயன் படுத்தப்படுகிறது.
- எலுமிச்சை போன்ற பிற வாசனைகளுடன் இந்த அத்தியாவசிய எண்ணெய்யை கலந்து சருமத்தில் தடவுவதன் மூலம் கொசு கடியிலிருந்து தப்பிக்கலாம். பெப்பர்மிண்ட் எண்ணெய்யை பாதாம் எண்ணெய்யுடன் கலந்து பயன்படுத்தவும். இது சிறந்த பலனைத் தரும்.
- லவங்கப்பட்டை சமையலுக்கு மட்டுமின்றி, கொசுக்கடியைத் தடுக்கும் சிறந்த வீட்டு வைத்தியமாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.
- லவங்கப்பட்டை எண்ணெய் கால் தேக்கரண்டி எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து சருமத்தில் தடவலாம். உடுத்தும் ஆடை மீதும், வீட்டின் அறையிலும் தெளிக்கலாம். அந்த வாசனை கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதனால் கொசுக்கடியில் இருந்து நிம்மதியாக இருக்கலாம்.
- பூண்டுவும் கொசுக்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பூண்டு துண்டுகளை நசுக்கி, அவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.
- பின்பு அந்த நீரை ஆற வைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறை முழுவதும் தெளிக்கவும். இந்த கரைசல் கொசுக்களை விரட்டியடித்து விடும். எனவே வீட்டில் பூண்டு வாசனை இருந்தால் கவலைப்படாதீர்கள். அங்கு கொசுக்கள் இருக்காது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment