லண்டனின் மாயாஜால கண்ணாடி வீடு! உங்க கண்ணையே நீங்க நம்ப மாட்டீங்க
- Get link
- X
- Other Apps
மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று இருப்பிடம், உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருக்க இருப்பிடம் போன்றவை மிக முக்கியமான தேவைகள்.
அதுவும் தாங்கள் வசிக்கும் வீடு மிக வித்தியாசமாக, பிரம்மாண்டமாக மற்றவர்கள் பார்த்து வாய்பிளக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படி மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது லண்டனின் கண்ணாடி வீடு.
கண்ணுக்கு தெரியாத வீடு
லண்டனின் ரிச்மண்ட்(Richmond) பகுதிலேயே இந்த கண்ணாடி வீடு அமைந்துள்ளது, கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் கட்டடக்கலை நிபுணர் அலெக்ஸ் ஹா (Alex Haw ) என்பவர் கண்ணாடிகளால் வடிவமைத்துள்ளார்.
முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீடு, இருக்கும் இடம் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, அந்த இடத்தில் வீடே இல்லை என்ற வண்ணம் எதிரில் இருப்பதை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம், ஆனால் வெளியே இருப்பவர்களால் வீட்டுக்குள் பார்க்க இயலாது.
உரிமையாளரின் சுவாரசிய பேட்டி
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்துள்ள பேட்டியில், 2015ம் ஆண்டு வரை சாதாரணமாக இருந்த எங்கள் வீட்டை மாற்றியமைக்க நினைத்தோம்.
எங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு நிபுணர் அலெக்ஸ் ஹா, கண்ணாடிகளை கொண்டு மாற்றியமைத்தார்.
மேகங்கள், மரங்களின் அசைவு அனைத்துமே பிரதிபலிக்கப்படுவதால், எங்கள் வீடு சுற்றுச்சூழலுடன் பேசும் விதமாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
ALSO READ : குளத்தில் விழப்போன சிறுவனை காப்பாற்றிய நாய்! நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment