இந்த அம்சத்தை
ஜூம் மீட்டிங்கிலும், வெபினார்களிலும் பயன்படுத்தலாம். தற்போது விண்டோஸ், மேக்ஓஎஸ், ஐஓஎஸ் சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிய அனைத்து ஊழியர்களுடன் ஒரே நேரத்தில் கலந்துரையாட ஜூம் செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது வரை பெரும்பாலான மீட்டிங், நண்பர்கள் உரையாடல் பல்வேறு அம்சங்கள் காரணமாக ஜூம் காலில் நடைபெற்று வருகிறது. இருப்பினும், சிலர் தங்களது முகத்தை காட்ட விருப்பிமின்றி வீடியோவை ஆஃப் செய்து வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே, ஜூம் நிறுவனம், ஆப்பிளின் மெமோஜிகளைப் போலவே அனிமேஷன் செய்யப்பட்ட அவதாரைப் பயன்படுத்தி வீடியோ அழைப்புகள் மற்றும் வெபினார்களில் பங்கேற்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மீட்டிங்கின் போது, நீங்கள் அவதார் அம்சத்தை இயக்கினால் போதும், ஜூம் சாப்ட்வேர் உங்கள் செல்போன் கேமரா மூலம் முகத்தை கண்டறிந்து, அதில் எமோஜியை ரிபிளேஸ் செய்துவிடும். அது, உங்கள் முக அசைவை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை ஜூம் மீட்டிங்கிலும், வெபினார்களிலும் பயன்படுத்தலாம். இதற்காக, உங்கள் போட்டோவை அனுப்ப வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்த அம்சம், தற்போது விண்டோஸ், மேக்ஓஎஸ், ஐஓஎஸ் சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூம் டெஸ்க்டாப் கிளைன்ட் அல்லது மொபைல் செயலியில் 5.10.0 வெர்ஷனுக்கு மேல் உபயோகிக்கலாம்.
ஜூம் காலில் அவதாரை தேர்ந்தெடுப்பது எப்படி?
முதலில் ஜூம் காலில் மீட்டிங்கில் பங்கேற்க வேண்டும்.அடுத்து, ‘ Start Video’ button இல் உள்ள ‘^’ சிம்பிளை கிளிக் செய்ய வேண்டும்.அப்போது, திரையில் ஒரு மெனு தோன்றும். அதில், “Choose Video Filter…” ஆப்ஷன் சேலக்ட் செய்ய வேண்டும்.இதைத் தொடர்ந்து,’பீட்டா’ சின்னத்துடன் கூடிய ‘அவதார்’ Tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.அதில், பூனை, பசு, முயல், போலார் கரடி, பாண்டா என பல விருப்பங்கள் இடம்பெற்றிருக்கும். எல்லா அவதாரும், அழகான உடையில் இருக்கும்.உங்களுக்கு விருப்பமான அவதாரை தேர்ந்தெடுக்க வேண்டும்.தற்போது, Start video button கிளிக் செய்வதன் மூலம், அவதாருடன் வீடியோவில் என்ட்ரி கொடுக்கலாம்.
தொற்றுநோய் காரணமாக வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடியோ சாட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பல வீடியோ அழைப்புகளில் பேசுகையில் சோர்வடைந்துவிடுவதாக பயனர்கள் கூறிவந்தனர்.தற்போது, இந்த அப்டேட் முகத்தின் சோர்வை மறைக்க வழிவகுப்பது மட்டுமின்றி, உரையாடல்களை மேலும் கலகலப்பானதாக மாறும்.
Comments
Post a Comment